சென்னை: நிறுவனங்களின் நிதி நிலை மற்றும் செயல் திட்டங்களை வைத்து இந்தியாவில் சிறந்த விளங்கும் நிறுவனமாக டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டிசிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வை டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் நிறுவனம் கடந்த ஒரு மாதமாகச் செய்து தற்போது வெளியிட்டுள்ளது.
டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் டாப் 500 நிறுவனங்களை ஆராய்ந்து அதன் பின்னரே முடிவுகளை அறிவித்துள்ளது.
18 மாதம்
கடந்த 12-18 மாதங்களில் இந்திய சந்தையின் முன்னணி நிறுவனங்கள் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ், ஐடிசி, சன் பார்மா போன்றவை சந்தை மதிப்பில் அதிகளவிலான மாற்றத்தைப் பெற்றுள்ளது.
டாப் 500 நிறுவனங்கள்
டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் நிறுவனம் ஆய்வு செய்த நிறுவனங்களில் பொதுத்துறை நிறுவனங்களின் அளவு 14 சதவீதம் மட்டுமே, ஆனால் வருவாய் மற்றும் லாப அளவில் இந்நிறுவனம் 40 சதவீத இடத்தைப் பிடித்துள்ளதாக இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
காரணிகள்
டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் 500 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்தும் மொத்த வருமானம், மொத்த லாபம், மதிப்பீடு மற்றும் சந்தை மதிப்பு ஆகிய காரணிகளைக் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
இதன் படி டாப் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களை இப்போது பார்ப்போம்.
டிசிஎஸ் முதல் ஓஎன்ஜிசி வரை..
இப்பட்டியலில் டிசிஎஸ், ரிலையன்ஸ், ஐடிசி மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை அடுத்ததடுத்து முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளது.
ஹெச்டிஎப்சி
அதன் பின் கோல் இந்தியா, இன்போசிஸ், ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி ஆகியவை 5 முதல் 8 வது இடங்களைப் பிடித்தது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர்
நுகர்வோர் நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் 9வது இடத்தையும், எஸ்பிஐ வங்கி 10 இடத்தையும் பிடித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications