மும்பை: நாட்டின் பொருளாதாரா மந்த நிலையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி வகிதமான ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்து 7.25 சதவீதமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இரு பொதுத்துறை வங்கிகள் தனது வட்டி விகித்தை குறைத்தது.

புதன்கிழமை எஸ்பிஐ வங்கி அறிவிப்பின் படி, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி வகிதத்தை 9.85 சதவீதத்தில் இருந்து 9.70 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மேலும் இந்த வட்டிக் குறைப்பு ஜூன் 8ஆம் தேதி முதல் வங்கிகளில் அமலாக்கம் செய்யப்படும் என இவ்வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடனுக்கான ஈஎம்ஐ அளவில் கணிசமான சரிவை எதிர்பார்க்கலம்.
அதேபோல் அலகாபாத் வங்கி தனது வட்டி வகிதத்தை 0.30% குறைந்துள்ளது, தேனா வங்கி 0.25% குறைத்து 10 சதவீதமாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications