டிசிஎஸ், இன்போசிஸ் போல் விப்ரோவும் 7% ஊதிய உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: ஐடித்துறையில் எதற்கெடுத்தாலும் போட்டி போடும் இன்போசிஸ், டிசிஎஸ், மற்றும் விப்ரோ நிறுவனங்கள் ஒரு விஷயத்தில் மட்டும் மெகா ஒற்றுமையைக் காட்டுகின்றன. எதில் என்பது உங்களுக்குத் தெரியுமா??

 

பணியாளர்களுக்குக் குறைவான சம்பளத்தை அளிப்பதிலும், ஊழியர்களிடம் இருந்து அதிக வேலை வாங்குதவிலும் தான்!

விப்ரோ

விப்ரோ

நாட்டின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோ தனது சாகாக்களை (டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ்) போலவே இந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வை சராசரியாக 7 சதவீதமாக அறிவித்துள்ளது.

நடுநிலை

நடுநிலை

2015-16ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வில் டிசிஎஸ் சராசரியாக 8 சதவீதமும், இன்போசிஸ் 6.5 சதவீதமும் அறிவித்துள்ளது. இவை இரண்டுக்கும் நடுநிலையாக விப்ரோ 7 சதவீதத்தை அளித்துப் பணியாளர்களை நிறுவனத்திலேயே நிலைக்க வைத்துள்ளது.

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

நாட்டின் மென்பொருள் துறையில் தலைசிறந்து விளங்கும் மூன்று நிறுவனங்களுமே ஊதிய உயர்வில் மெத்தனம் காட்டினால் பிற நிறுவனங்கள் கண்டிப்பாக அதிக ஊதிய உயர்வு அளிக்காது.

மேலும் பிரஷ்ஷர்கள் எனப்படும் கல்லூரி படிப்புகளை முடித்த பின் நிறுவனத்தில் புதிதாகச் சேரும் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தைக் கடந்த 7 வருடமாக உயர்த்தாமல் ஏமாற்றி வருகிறது.

 இவர்களுக்கு 2% மட்டுமே..
 

இவர்களுக்கு 2% மட்டுமே..

விப்ரோ நிறுவனத்தின் அறிவிப்புகள் படி வெளிநாடுகளில் பணியாற்றும் பணியார்களுக்கு இந்நிறுவனம் 23 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு அளிக்கிறது.

இந்தியாவில் பணியாற்றும் பணியாளர்களுக்குச் சராசரியாக 7 சதவீதம் அளித்துள்ளதாக இந்நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவர் சவுரப் கோவில் தெரிவித்தார்.

டாப் பணியாளர்கள்

டாப் பணியாளர்கள்

நிறுவனத்தில் டாப்பாகப் பணியாற்றியவர்களுக்கு 2 இலக்க ஊதிய உயர்வு அளித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை கொஞ்சம் படிங்க பாஸ்!!

இதை கொஞ்சம் படிங்க பாஸ்!!

புதிய பணியாளர்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் இந்திய ஐடி நிறுவனங்கள்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro announces average salary hike of 7%, just like TCS and Infosys

India's third-largest software exporter Wipro announced average wage hike of 7%, in line with bigger rivals Tata Consultancy Services and Infosys' announcements earlier this year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X