இனி இன்போசிஸ் நிறுவனத்தில் "பேஸ்புக்"கும் உண்டு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: 34 வருடம் 2 நாள் பழமையான இன்போசிஸ் நிறுவனம் நாட்டின் மென்பொருள் துறையில் நீங்கா இடம்பிடித்துள்ளது. ஜூன் 2, 1981ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்நிறுவனம் நாராயணமூர்த்தி தலைமையில் மிகப்பெரிய உயரங்களை எட்டியது.

 

இந்நிலையில் கடந்த ஜூன் 12ஆம் தேதி நிறுவன பொறுப்புகளில் இருந்து நாராயணமூர்த்தி விலகினார். இதேநாளில் விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.

டிரஸ் கோடு

டிரஸ் கோடு

சிக்கா நியமனத்திற்குப் பிறகு இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாளர்களுக்குச் சாதகமான பல மாற்றங்கள் நிகழ்ந்தது. இன்போசிஸ் நிறுவனத்தில் காலம் காலமாக இருந்த பார்மல் டிரஸ் கோடை விஷால் சிக்கா கேஷூவல் டிரஸ் கோடாக மாற்றினார்.

பேஸ்புக்

பேஸ்புக்

தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் பேஸ்புக் போன்ற சமுக வளைத் தளங்களையும் பயன்படுத்த பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளையும் விஷால் சிக்கா நீக்கியுள்ளார். இதனால் இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

பணி முடித்தபின் பேஸ்புக்

பணி முடித்தபின் பேஸ்புக்

சமுக வளைத்தளங்களைப் பயன்படுத்த அனுமதிப்பதால், 8 மணிநேரமும் பயன்படுத்தக் கூடாது. உங்களின் நடவடிக்கையை எப்போதும் நிர்வாகம் கவணித்திக்கொண்டே இருக்கும்.

எனவே உங்களின் வேலையை முடித்த பிறகு இத்தகை தளங்களைப் பயன்படுத்துவதில் நிறுவனத்திற்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என விஷால் சிக்கா பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தார்.

பிளாக்
 

பிளாக்

மேலும் இந்திய ஐடி நிறுவன சீஇஓக்களில் முதன்முதலாக விஷால் சிக்கா தான் தனிப்பட்ட பிளாக்கும், அதைப் பொதுவாக யார் வோண்டுமானலும் படிக்க இயலும் வகையில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத்து. இதன் மூலம் இவர் சமுக வலைத்தளத்தின் மீது வைத்துள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No tie, no suit, and Facebook in office

Sikka, the first non-founding CEO of Infosys, allowed employees to access social networking websites such as Facebook or Twitter in office.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X