ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை ஓரம்கட்டும் இந்திய நிறுவனம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்திய சந்தையில் பெரும் முதலீட்டுடன் இறங்கிய ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பதம் பார்த்து வருகிறது இந்திய நிறுவனமான கேப் காஃபி டே.

 

இந்திய காஃபி விற்பனை சந்தை கடந்த 10 வருடங்களில் பல புதிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இந்த மாற்றங்களை விரும்பி இந்திய சந்தையில் இறங்கிய ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்குக் கேப் காஃபி டே வர்த்தகம் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

கிளைகள்

கிளைகள்

இந்தியாவில் 200க்கும் அதிகமான நகரங்களில் கேப் காஃபி டே நிறுவனம் சுமார் 1500க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது. இதில் பெங்களூரில் மட்டும் 191, டெல்லியில் 185 எனக் கலக்கி வருகிறது.

ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ்

இந்தியாவில் இந்நிறுவனத்தின் கிளை வெறும் 71 மட்டும் தான். அதிலும் வர்த்தக அளவு மிகவும் குறைவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் இந்தியாவில் டாடா குழுமத்துடன் இணைந்து சந்தையில் இறங்கியது. கிளைகள் துவக்கத்தில் சிறப்பான வர்த்தகத்தை அடைந்தாலும், நாட்கள் நகர வர்த்தகம் நலிவடைந்தது.

 

முழுவதும் நஷ்டம்

முழுவதும் நஷ்டம்

இந்தியாவில் டாடா குழுமத்துடன் இணைந்து செயல்படும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான Tata Global Beverages 2014ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் லாப அளவு சுமார் 94.37 சதவீதம் சரிந்துள்ளது.

ஐபிஓ
 

ஐபிஓ

இந்நிலையில் கேப் காஃபி டே நிறுவனத்தின் தாய் நிறுவனமான காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் பங்குச் சந்தையில் இறங்குவதற்காகத் திட்டமிட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

 

போட்டி

போட்டி

இன்றைய நிலையில் கேப் காஃபி டே நிறுவனத்திற்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மட்டும் அல்லாமல் கோஸ்டா காஃபி, பரிஸ்டா மற்றும் மெக்டொனால்டு ஆகியவை கடுமையான போட்டியை அளித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This Indian coffee chain is beating Starbucks at its own game

Café Coffee Day, owned by the holding company Coffee Day Enterprises Ltd, is already the market leader when it comes to coffee in India.
Story first published: Thursday, June 4, 2015, 18:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X