பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் செயல்படா நிர்வாக இயக்குனராகச் செயல்பட்டு வந்த கே.வி காமத் பிரிக்ஸ் வங்கியின் தலைவராக நியமிக்கப்படுவதால் இவர் அனைத்துப் பதவிகளில் இருந்து விலகுகிறார்.
இதன் படி ஆசிய வளர்ச்சி வங்கி, இன்போசிஸ், ஐசிஐசிஐ ஆகிய நிறுவனங்களில் இருந்து காமத் விலகியுள்ளார்.
இன்போசிஸ்
இந்நிறுவனத்தில் செயல்படா நிர்வாக இயக்குனராகச் செயல்பட்டு வந்த கே.வி காமத் பதவி விலகுவதால், இவ்விடத்தில் ஆர்.சேஷசாயி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.சேஷசாயி
2011ஆம் ஆண்டு முதல் ஆர்.சேஷசாயி இன்போசிஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக உள்ளார். இதனுடன் ஆடிட்டிங் கமிட்டி குழுவின் தலைவராகவும் சேஷசாயி உள்ளார்.
இந்நிலையில் இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்படா நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற நிறுவனங்கள்
இவர் இன்போசிஸ் நிறுவனம் மட்டும் அல்லாமல் அசோக் லெய்லான்டு, இண்டஸ்இன்ட் வங்கி ஆகிய நிறுவனங்களிலும் செயல்படா நிர்வாக இயக்குனராக உள்ளார்.
பங்குச் சந்தை
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 16.55 புள்ளிகள் சரிந்து 2,011.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


Click it and Unblock the Notifications