ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் விமானங்களை அதிகரிக்க அஜய் சிங் திட்டம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைச் சரிவு பாதையில் இருந்து லாபகரமான நிலைக்குக் கொண்டு வந்த அஜய் சிங், வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெற நிறுவனத்தில் விமான எண்ணிக்கையை உயர்த்தும் திட்டத்தில் இறங்கியுள்ளார்.

 

கடந்த டிசம்பர் மாதம் முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் சுமார் 800 கோடி ரூபாய் முதலீடாகக் கொண்டு சேர்த்துள்ளார் அஜய் சிங்.

வாடிக்கையாளர் அதிகரிப்பு

வாடிக்கையாளர் அதிகரிப்பு

அஜய் சிங் தலைமையிலான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் புதிய திட்டமுறைகளின் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இத்தருணத்தில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தொடர்ந்து பயணிகள் சேவையைத் திறம்பட அளிக்க முடியும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அஜய் சிங்

அஜய் சிங்

சில மாதங்களுக்கு முன்பு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மூடும் நிலையில் இருந்து, ஆனால் தற்போது அடுத்ததடுத்த திட்ட நடவடிக்கை மற்றும் முதலீட்டின் மூலம் இந்நிறுவனம் சிறப்பாகச் செயல்படத் துவங்கி வாடிக்கையாளர் நம்பிக்கையைக் கைப்பற்றியுள்ளோம் என அஜய் சிங் தெரிவித்தார்.

800 கோடி முதலீடு
 

800 கோடி முதலீடு

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கலாநிதி மாறனிடம் இருந்து நிர்வாகப் பொறுப்புகள் அஜய் சிங்கிற்குக் கைமாறிய பிறகு சுமார் 800 கோடி ரூபாய் முதலீடாகக் குவிந்துள்ளது.

இந்த முதலீட்டு அளவை 1500 கோடி ரூபாய் வரை உயர்த்தப்படும் எனவு அஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விரிவாக்கம்

விரிவாக்கம்

7 காலாண்டுகளுக்குப் பின்பு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது லாபகரமாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் விமானங்கள் எண்ணிக்கையை உயர்த்த அஜய் சிங் திட்டமிட்டுள்ளார்.

7 விமானங்கள்

7 விமானங்கள்

2015-16ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்தில் புதிதாக 6 முதல் 7 விமானங்களை இணைக்கப்பட உள்ளதாகவும் அஜய் சிங் தெரிவித்தார்.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இந்த அறிவிப்பின் மூலம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் இன்று 3.58 சதவீதம் அதிகரித்து 18.80 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ajay Singh to invest more in 'upswing' SpiceJet's fleet expansion

With fortunes of SpiceJet on an "upswing again", its chairman and main promoter Ajay Singh will look at putting in more money for fleet expansion, even as he continues to explore various investment options.
Story first published: Monday, June 8, 2015, 14:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X