2 மாதத்தில் சிறு வங்கிகளுக்கான உரிமம் வழங்கப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: இந்தியாவில் சிறு மற்றும் பேமென்ட் வங்கிகளை அமைப்பதற்காக விண்ணப்பம் அளித்துள்ள 113 விண்ணப்பதாரர்களை ஆய்வு செய்து அடுத்த இரு மாதத்திற்குள் முதற்கட்ட உரிமம் வழங்கும் பணிகளைத் துவங்க உள்ளோம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முதற்கட்ட பணியில் ரிசர்வ் வங்கி, தகுதி உடைய சில நிறுவனங்களுக்கும் மட்டும் நிதி சேவை அளிப்பதற்கான உரிமங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

113 விண்ணப்பதாரர்கள்

113 விண்ணப்பதாரர்கள்

இந்த 113 விண்ணப்பங்களில் 72 பேர் சிறு வங்கிகளை அமைப்பதற்கும், 41 பேமென்ட் வங்கி சேவையை அளிப்பதற்கும் ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

நாட்டில் சிறு வங்கிகள் அமைக்க விண்ணப்பம் அளித்து நிறுவனங்களில் இந்தியா போஸ்ட் (இந்திய தபால் துறை), டெக் மஹிந்திரா, வீடியோகான் குரூப், என்எஸ்சி மற்றும் அம்பானி மற்றும் பிர்லா குழுமங்களும் விண்ணப்பம் அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

மத்திய அரசின் விதிமுறைகளுக்கு இணங்க, ரிசர்வ் வங்கி விண்ணப்பக்களை ஆய்வு செய்து ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முதல்கட்ட வங்கி உரிமங்கள் அளிக்கும் பணிகளைத் துவங்கப்படும் என ஆர்பிஐ தலைவர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

 சிறு வங்கி

சிறு வங்கி

புதிதாக உரிமம் பெறும் விண்ணப்பதாரர்கள், சிறு வங்கிகளில் டெப்பாசிட்களைப் பெறவும், நிறுவனங்கள், தனிநபர்கள், விவசாயிகளுக்குக் கடன் சேவை அளிக்கவும் முடியும்.

என்ன லாபம்

என்ன லாபம்

மேலும் நாட்டின் சிறந்த முறையில் வர்த்தகத்தில் ஈடுப்படும் நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை உண்டு, அந்த வகையில் சிறு வங்கிகளை அமைப்பதன் மூலம் அதிகளவிலான நிதியைப் பெற முடியும்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளை விடவும் அதிகளவிலான வட்டி வருமானம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

 

பேமென்ட் வங்கிகள்

பேமென்ட் வங்கிகள்

இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் பணத்தைப் பிற கணக்காளர்களுக்குச் செலுத்தவும், பணத்தை டெப்பாசிட் செய்ய முடியும். ஆனால் இத்தகைய வங்கிகளால் கிரேடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டுகளை வழங்க முடியாது.

வணிக வங்கிகள்

வணிக வங்கிகள்

சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கியிடம் முழுமையான வங்கிச் சேவை அளிக்க நாட்டின் பெரும் நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்தது. இதில் ஐடிஎப்சி மற்றும் பந்தன் ஆகிய நிறுவனங்கள் மட்டும் உரிமத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+