ஹெச்1-பி விசா முறைகேடு: இன்போசிஸ், டிசிஎஸ் மீது அமெரிக்க அரசு விசாரணை

பெங்களூரு: இந்திய நிறுவனத்தின் வாயிலாக அமெரிக்காவிற்கு வேலைக் காரணமாகச்செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு ஹெச்1- பி விசா வழங்கி வருகிறது. இந்தியாவில்இத்தகைய விசாவை அதிகம் பெறுபவர்கள் ஐடி நிறுவன பணியாளர்கள் தான்.

இந்நிலையில் ஹெச்1-பி விசா பெறுதில் செய்யப்பட்ட முறைகேடுகளை விசாரிக்க டிசிஎஸ்மற்றும் இன்போசிஸ் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசு விசாரணை துவங்கியுள்ளது.

இதனால் ஆன்சைட்டில் வேலை செய்வோருக்கு இனி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அதிகளவிலான விண்ணப்பங்கள்

அதிகளவிலான விண்ணப்பங்கள்

கடந்த 3 ஆண்டுகளாக ஹெச்1-பி விசாவுக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டு, தேவைக்கு அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்து, குலுக்கல் நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு விசா வழங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஹெச்1-பி விசா, விதிகளை மீறி தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்காவில் புகார்கள் கிளம்பி உள்ளன.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதற்கு அமெரிக்க எம்.பி.கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விசா மோசடி குற்றச்சாட்டு குறித்து அமெரிக்கத் தொழிலாளர் துறை விசாரணை நடத்தத் தொடங்கி உள்ளது. இதை இல்லினாய்ஸ் எம்.பி., ரிச்சர்டு டர்பின், அலபாமா எம்.பி., ஜெப் செசன்ஸ் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

ஆட்குறைப்பு

ஆட்குறைப்பு

அமெரிக்காவிவ் உள்ள முக்கிய நிறுவனங்களில் அந்நாட்டுப் பணியாளர்களை ஆட்குறைப்புச் செய்து விட்டு, அந்த இடத்தில் ஹெச் 1 பி விசா வைத்துள்ள இந்தியர்களை நியமனம் செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தியர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுத்தால் போது என்பது நிறுவனத்தின் கணக்கு.

விசாரணை

விசாரணை

இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற அவுட்சோர்ஸ் நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தம் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணியாளர்களை அனுப்பி வைப்பதாக அமெரிக்க அரசு கூறுகிறது. அதற்கான விசாரணையை இந்நிறுவனத்தின் மீது தொடுத்துள்ளது.

எடிசன் மின் நிறுவனம்

எடிசன் மின் நிறுவனம்

கலிபோர்னியாவில் உள்ள சதர்ன் கலிபோர்னியா எடிசன் மின் நிறுவனம், சமீபத்தில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்து அப்பணியிடங்களில் ஹெச்1- பி விசா வைத்துள்ள இந்தியர்களை நியமித்துள்ளனர்.

வால்ட் டிஸ்னி

வால்ட் டிஸ்னி

பொழுதுபோக்குத் துறையில் பிரசித்தி பெற்ற வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் 250 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டு, அந்த இடத்திலும் ஹெச்1-பி வைத்துள்ள இந்தியர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.

சந்திரசேகர்

சந்திரசேகர்

இவ்விசாரணையைப் பற்றி நாஸ்காம் அமைப்பு தலைவர் சந்திரசேகர் கூறுகையில்,'அமெரிக்கச் சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இந்திய நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பதை அந்நாட்டு அரசு விசாரணையில் தெளிவாகப் புரிந்துகொள்ளும்' எனக் கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+