டெல்லி: ஏப்ரல் மாத்தில் நாட்டின் மொத்த தொழிற்துறை உற்பத்தி அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 4.1 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதனால் பங்குச்சந்தையில் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான உயர்வைச் சந்திக்கும் எனவும், குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வேகமான வளர்ச்சியை எட்டும் எனப் பங்குச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கணிப்புகள்
ஏப்ரல் மாத தொழிற்துறை வளர்ச்சி, சந்தை வல்லுனர்களின் கணிப்பான 1.6 - 2 சதவீதத்தைத் தகர்த்து 4.1 சதவீதமாகப் பதிவு செய்துள்ளது. மேலும் மார்ச் மாதத்தில் இதன் அளவு 2.1 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர் பணவீக்கம்
இந்நிலையில் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் அளவு ஏப்ரல் மாத்தில் 4.87 சதவீதம் அளவு உயர்ந்து, பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளது.
உற்பத்தி அளவு இரட்டிப்பு
நாட்டின் மொத்த உற்பத்தி அளவு மார்ச் மாத்தில் சுமார் 5.1 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இதன் இரட்டிப்பாகியுள்ளது.
இதன் மூலம் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவில் செயல்படத் துவங்கியதைக் காட்டுகிறது.
கலால் வரி
இந்தியாவில் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளதால், மத்திய அரசின் கலால் வரி வசூல் சுமார் 84 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் செரிவித்துள்ளது.
கடந்த மே 2014ஆம் ஆண்டில் நாட்டின் கலால் வரி வசூல் 11,838 கோடி ரூபாயாக இருந்தது, ஆனால் தற்போது 84 சதவீதம் அதிகரித்து 21,809 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications