வட்டி விகிதத்தைக் குறைக்க அருண் ஜேட்லி வங்கிகளுக்கு வேண்டுகோள்!

டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டிக் குறைப்பை ஏற்று வணிக வங்கிகள் மக்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டியை உடனடியாகக் குறைக்க வேண்டும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேட்டுக்கொண்டார்.

கடந்த 6 மாதத்தில் ரிசர்வ் வங்கி 3 முறை வட்டி விகிதத்தைக் குறைத்தாலும், வணிக வங்கிகள் சில புள்ளிகளை மட்டுமே குறைத்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையிலேயே உள்ளது.

வங்கிகள் பதில்

வங்கிகள் பதில்

கடந்த நான்கு மாதத்தில் ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டியைக் குறைத்தாலும், வங்கிகளில் செலவீன அதிகரிப்பு, வைப்பு நிதிகள் குறைவு, பணப் புழக்கம் குறைவு ஆகிய காரணங்களால் வட்டியைக் குறைக்க முடியாத நிலையில் உள்ளதாக வங்கித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிதியமைச்சர்

நிதியமைச்சர்

நிதிப் பற்றாக்குறையால் நாட்டில் தடைப்பட்டுள்ள திட்டங்கள் பற்றி விவாதிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் நிதியமைச்சர் வங்கிகள் உடனடியாக வட்டி வகிதத்தைக் குறைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ரூ.7,940 கோடி

ரூ.7,940 கோடி

வங்கிகளுடனான வருடாந்திர கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வருடாந்திர பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தது போல் இந்திய வங்கி அமைப்பில் ரூ.7,940 கோடி உட்செலுத்தும் திட்டத்தை அடுத்தச் சில மாதங்களில் பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

 வராக் கடன்

வராக் கடன்

மார்ச் மாத முடிவில் நாட்டின் வராக் கடன் அளவு 5.64 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் வங்கித்துறையில் செயல்படுத்தப்படும் உட்செலுத்தும் திட்டம் கண்டிப்பாக அதிகப்படியான லாபத்தைத் தரும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

வட்டிக் குறைப்பு

வட்டிக் குறைப்பு

இதன் மூலம் அடுத்தச் சில நாட்களில் இந்திய வங்கிகள் கடனுக்கான வட்டியைக் குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+