டெல்லி: இந்தியாவில் முன்னணி பிராட்பேன்ட் மற்றும் மொபைல் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், ரஷ்யாவின் சிஸ்டெமா நிறுவனத்தின் இந்திய கிளையான சிஸ்டெமா ஷாம் டெலிசர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்ற அனில் அம்பானி நேரடியாகப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார்.
பாதுகாப்புத் துறையில் 11 நிறுவனங்களைப் புதிதாகத் துவங்க உள்ள அனில் அம்பானி தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்திக்க உள்ளார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM)
இதுகுறித்து RCOM கூறுகையில், பேச்சுவார்த்தையில் இரு நிறுவனங்களுக்கும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது, கூடிய வரையில் நிறுவனத்திற்குச் சாதகமான செய்திகளை எதிர்பார்க்கலாம் எனத் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
உறுதியான செய்திகள்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இரு நிறுவனங்களுக்கும் மத்தியிலான பேச்சுவார்த்தையில் தோல்வியும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இதைக் கவனத்தில் கொண்டு முதலீடு செய்யவும்.
சிஸ்டெமா ஷாம் டெலிசர்வீசஸ்
இப்பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் நிலையில் சிஸ்டெமா ஷாம் டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ரஷ்ய சிஸ்டெமா நிறுவனம் இந்தியா சந்தையில் அதிகளவில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் 0.35 புள்ளிகள் உயர்ந்து 58.85 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அனில் அம்பானி
கடந்த சில மாதங்களாக அனில் அம்பானி பல புதிய திட்டங்கள் மற்றும் முதலீடுகளைச் செய்து வருகிறார். இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளக் கிளிக் செய்யவும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications