டெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், மே மாதத்தில் கணிப்புகளை விடவும் குறைவான வேகத்தில் சரிந்து -2.36 சதவீதத்தை எட்டியது. கடந்த 7 மாதங்களாக மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து சரிவு பாதையிலேயே உள்ளது.
ஏப்ரல் மாத்தில் இதன் அளவு -2.65 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மே மாத்தில் இதன் அளவு -2.5 சதவீதமாக மட்டுமே குறையும் எனச் சந்தை கணிப்புகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்மறை பணவீக்கம்
பணவீக்கத்தின் அளவு எதிர்மறையில் குறிப்பிடப்படுவதால், சரிவை உயர்வாக பார்க்கப்படும்.
இந்தியாவில் எண்ணெய் விலை சரிவு, உற்பத்தி பொருட்களின் விலை, ஏற்றுமதியில் மிதமான நிலை நிலவியதால் மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கத்தின் பாதிப்புக் கணிசமாகக் குறைந்தது.
எண்ணெய் விற்பனை
கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இந்தியாவில் எண்ணெய்யின் மொத்த விற்பனையில் விலை மதிப்பு சுமார் 10.51 சதவீதம் குறைந்துள்ளது.
உற்பத்தி பொருட்கள்
அதேபோல் உற்பத்தி பொருட்களின் விலை மதிப்பும் 0.64 சகவீதம் குறைந்துள்ளதால், பணவீக்கத்தின் அளவு கணிசமான அளவு மட்டுமே சரிந்துள்ளது.
பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ 130.25 புள்ளிகள் வரை உயர்ந்து 26,555.55 புள்ளிகளை வரை உயர்ந்தது.


Click it and Unblock the Notifications