மும்பை: இந்திய ஆடம்பர கார் விற்பனையில் 2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 40 சதவீத உயர்வைக் கண்டுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம். இதனால் விற்பனையில் தனது இடத்தைத் தக்க வைத்துள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த வளர்ச்சி 2015ஆம் ஆண்டு முழுவது தொடரும் எனவும் இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆடம்பர கார் விற்பனை
இந்தியாவின் பொருளாதார வளச்சிக்கு ஏற்ப ஆடம்பர கார் விற்பனையின் அளவு இவ்வருடம் 20 சதவீதம் அதிகரிக்கும் எனச் சந்தை கணிப்புகள் தெரிவிக்கிறது.
பென்ஸ் நம்பிக்கை
2014ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆடம்பர கார் நிறுவனங்களாகக் கருதப்படும் பென்ஸ், ஆடி, மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் சுமார் 33,000 கார்களை விற்றது.
இவ்வருடம் இதன் அளவு 40,000 என்கிற எண்ணிக்கையை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது, இதில் மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை அதிகளவில் இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
5 வருட போராட்டம்
கடந்த 5 வருடங்களாக இந்தியாவில் ஆடி நிறுவன தயாரிப்புகள் சிறப்பாக இருந்ததால், பென்ஸ் தாக்கு பிடிக்க முடியாமல் தவித்தது. கடந்த மார்ச் மாத காலாண்டில் விற்பனையில் 40 சதவீத உயர்வைக் கண்டு மீண்டும் தனது இடத்தைப் பிடித்தது.
எபர்ஹார்ட் கோர்
2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும் இந்நிலையில் இவ்வரும் முழுவதும் நிலையானதாக அமையும் என்று தான் நம்புவதாக மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய நிறுவனத்தின் தலைவர் எபர்ஹார்ட் கோர் தெரிவித்தார்.
ஆடம்பர சந்தை
இந்தியாவில் ஆடம்பர சந்தையின் அளவு சந்தை கணிப்புகளும் வேகமாக வளர்ந்து வருவதால் ஆடை முதல் கார்கள் வரை அனைத்து ஆடம்பர பொருட்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மார்ச் காலாண்டு
மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் பென்ஸ் நிறுவனம் 3,566 கார்களையும்,. ஆடி நிறுவனம் 3,181 கார்களை விற்பனை செய்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications