மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் பிரான்ட், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சில்லறை வர்த்தக நிறுவனமான முஜி (MUJI) உடன் இணைந்துள்ளது.
இந்தியாவில் இக்கூட்டணி ஆன்லைன் விற்பனையில் இறங்காமல் நேரடி கடைகளின் மூலம் மக்களை அடையத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மூஜி நிறுவனம் ஆடை முதல் உணவுப் பொருள் வரை அனைத்தையும் விற்க முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் பிரான்ட் நிறுவனம் முகேஷ் அம்பானி அவர்களின் கீழ் செயல்பட்டு வருகிறது.
டெல்லி மற்றும் மும்பையில் டிரைல்
ரிலையன்ஸ் பிரான்ட் மற்றும் முஜி நிறுவனம் அடுத்த வருடத்தின் மத்தியில் டெல்லி மற்றும் மும்பையில் சில கிளைகளை நிறுவி தனது வர்த்தகத்தைத் துவக்க உள்ளதாக ரிலையன்ஸ் பிரான்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
போட்டி
புதிய நிறுவன வருகையால் பிக் பஜார், மேக்ஸ், டோட்டல், போன்ற நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கவும் உள்ளது. மேலும் இந்தியாவில் முஜி வருகையால் பர்னிச்சர்கள் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது. ஏற்னவே ஐகியா நிறுவனத்தின் மூலம் பர்னிச்சர் விற்பனை சந்தையில் கணிசமான மாற்றத்தைக் கண்டுள்ளது.
மற்றொரு ஜப்பான் நிறுவனம்
இந்நிலையில் ஜாப்பானின் மற்றொரு நிறுவனமான யூனிக்லோ நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தை ஜப்பானின் ஐகியா என அழைக்கப்படுவது வழக்கம்.
மேலும் யூனிக்லோ நிறுவனம் உலக நாடுகளில் சுமார் 700 கிளைகளைக் கொண்டு செயல்படுகிறது.
முஜி
ஆசியாவிலேயே வர்த்தகத்திற்கு மிகவும் உகந்த நாடாக (வளர்ச்சி மிகுந்த சந்தை, அதிகளவிலான நுகர்வோர் எனப் பல காரணங்கள் உண்டு இத்தகைய தகுதியை பெற ) உள்ள இந்தியாவில் எங்களது வர்த்தகத்தைத் துவங்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். தற்போது அதற்கான வழியும் கூட்டணியும் கிடைத்துள்ளதை கண்டு மகிழ்ச்சி அடைவதாக முஜி நிறுவனத்தின் தலைவர் Satoru Matsuzaki தெரிவித்தார்.
முதல்கட்ட விற்பனை
மேலும் Satoru Matsuzaki கூறுகையில் முதற்கட்டமாக இந்தியாவில் வீட்டுப் பொருட்கள் மற்றும் பர்னிச்சர்களை விற்பனை செய்ய உள்ளம். இதனுடன் ஹெல்த் மற்றும் பியூட்டி பொருட்களையும் விற்கத் திட்டமிட்டு உள்ளோம் எனத் தெரிவித்தார்.
புதிய கடைகள்
டெல்லி மற்றும் மும்பை பகுதியில் அமைக்கப்படும் கிளைகள் சுமார் 6,000 - 10,000 சதுரடியில் அமைக்கப்பட உள்ளது. இதில் நுகர்வோருக்கு தேவையான சக வசதிகளும் அடங்கும்.
ஆன்லைன் டூ ஆப்லைன்
இந்திய மக்கள் அனைவரும் ஆன்லைன் வர்த்தகத்தை நாடும் போது ரிலையன்ஸ் நிறுவனம் நேரடி கடைகளின் மூலம் மக்களை அடையத் திட்டமிடுகிறது.
பொருத்திருந்து பார்ப்போம்..


Click it and Unblock the Notifications