மும்பை: இந்தியாவில் அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததால் ரூபாய் மதிப்பு கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 21 மாத சரிவை எட்டியது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கப் பெடரல் வங்கியின் பாலிசி ஆலோசனை கூட்டம் துவங்கியதன் காரணமாக இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடு கிடைந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 0.9 பைசா உயர்ந்து 64.15 ரூபாயை அடைந்து 21 மாத சரிவில் இருந்து தப்பியது.
கடந்த ஒரு வார காலமாக இந்திய சந்தையில் இருந்து முதலீட்டை விடவும் நிதி வெளியேற்றம் அதிகமாக இருந்தது, அதுவே ஆமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 மாத சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இதே நிலையில் கிரீஸ் நாடும் அதிகளவிலான டாலர் தேவையில் இருப்பதாலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதிகமாக இருந்தது.


Click it and Unblock the Notifications