டெல்லி: புதன்கிழமை நடத்த முக்கியக் கூட்டத்தில் நிதியமைச்சகத்தின் பரித்துறையை ஆய்வு செய்த பன்னாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) 6750.86 கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் பியோகான் நிறுவனத்தின் கிளை நிறுவனமான சைன்ஜீன் மற்றும் டோரென்ட் பார்மா, ஸ்டார் இந்தியா ஆகிய நிறுவனங்களின் முக்கியத் திட்டங்களும் அடங்கும்
டோரன்ட் பார்மா நிறுவனம் தனது அன்னிய முதலீட்டு அளவை 13.09 சதவீதத்தில் இருந்து 35 சதவீதம் வரை உயர்த்தும் திட்டத்தின் 3,000 கோடி ரூபாய் அளவிலான அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதே போன்ற திட்டத்தின் ஸ்டார் இந்தியா மற்றும் சைன்ஜீன் நிறுவனம் ரூ.2,500 கோடி, ரூ.930 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் பின் BASF கெமிக்கல் இந்தியா, ஆர்டியான் ஹெல்த் கேர், TRIF கொச்சி, TRIF ரியல் எஸ்டேட், பெர்கூரென் ரியல் எஸ்டேட் மற்றும் டூரே லைப்ஸ்டைல் பத்திரிக்கை நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications