டெல்லி: உலகின் மிகப் பிரபலாமான வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான சிஸ்கோ, இந்தியாவில் உற்பத்தியைத் துவங்குவதற்காக 1.74 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
தற்போது புதிதாக உற்பத்தி தளத்தை அமைக்கவும், தயாரிப்பைத் துவங்கவும் 60 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்யச் சிஸ்கோ முடிவு செய்துள்ளது.
ஜான் சேம்பர்ஸ்
இந்தியாவில் நாங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம், குறிப்பாக இம்முதலீட்டை உற்பத்தியில் பயன்படுத்தவும் உள்ளோம். இதன் மூலம் பல வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் ஜான் சேம்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
மொத்த முதலீடு
சிஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் இந்தியாவில் 1.7 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்து வருகிறது.
பயிற்சி
இந்தியாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1,20,000 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் சுமார் 20 மில்லியன் டாலர் பணத்தை 2020ஆம் ஆண்டுக்குள் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஜான் தெரிவித்தார்.
வருமானம்
இந்தியாவில் இருந்து இந்நிறுவனத்திற்குச் சுமார் 1.1 பில்லியன் டாலர் அளவு வருவாய்ப் பெறுகிறது. மேலும் அடுத்த 4 வருடத்தில் இதன் அளவு இரட்டை எண்களாக மாறும் எனச் சிஸ்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மோடியுடன் சந்திப்பு
டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இணைவது பற்றி மோடி சிஸ்கோ நிறுவனத்தின் தலைவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். இதில் ஜான் சேம்பர்ஸ் அவர்களும் இடம்பெற்றார்.


Click it and Unblock the Notifications