ஒரு வாரத்திற்கு 'யுஎஸ் விசா அப்பாயின்மென்ட்' ரத்து: அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கோவில் வாசலுக்குப் பிறகு மக்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கும் இடம் அமெரிக்கத் தூதக்கரகத்தில்தான். அமெரிக்க எம்பஸியில் ஹார்டுவேர் கோளாறு ஏற்பட்டுள்ள காரணமாக இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய அனைத்து இடங்களிலும் ஒரு வாரத்திற்கான விசா அப்பாயின்பென்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இது அமெரிக்க விசாவுக்காக காத்திருப்பவர்களை 'டிஸ்அப்பாயின்ட்' ஆக்கியுள்ளது!

யுஎஸ் எம்பஸி

யுஎஸ் எம்பஸி

தற்போது ஏற்பட்டுள்ள கோளாறுகளைத் தீர்க்க தனியார் மற்றும் அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் 24*7 மணிநேரமும் ஈடுபட்டுள்ளனர். இக்கோளாறுகளைத் தீர்க்க குறைந்தது ஒரு வாரம் ஆகும் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரச்சனை இல்லை

பிரச்சனை இல்லை

ஜூன் 22 முதல் 26 ஆம் தேதிகளில் பயோமெட்ரிக் பதிவு மற்றும் விசா தேர்வுகள் உள்ள அனைவருக்கும் ஜூன் 6ஆம் தேதிக்குப்பின் அப்பாயின்பென்ட் மாற்றப்பட உள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஒரு வாரம் மட்டும் தான்

ஒரு வாரம் மட்டும் தான்

இந்த ஒரு வார கால அளவு எக்காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது, பிரச்சனைகள் தீர்ந்த உடனேயே தேக்கத்தில் உள்ள விசா விண்ணப்பங்கள் அனைத்தும் வரைவுடன் முடிக்கப்பட உள்ளதாக அமெரிக்கத் தூதரகச் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தொடர் கதை..
 

தொடர் கதை..

கடந்த வருடமும், 2 லட்ச விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் போது சர்வர் முடங்கி விசா அப்பாயின்மென்ட் ரத்துச் செய்யப்பட்டது. ஆனால் தற்போது நிகழ்ந்துள்ள இக்கோளாறு வித்தியாசமானது.

ஹெச்1பி விசா

ஹெச்1பி விசா

அமெரிக்காவில் சூடுப்பிட்டித்துள்ள இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவன ஹெச்1பி விசா முறைகேடுகளால், பல ஆயிரம் இந்தியர்கள் இரவோடு இரவாக வேலை பறிபோகும் நிலையில் உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது.

இதற்கான விசாரணை இரு நிறுவனங்கள் மத்தியில் நடந்து வருகிறது.

டிசிஎஸ் மறுப்பு

டிசிஎஸ் மறுப்பு

இக்குற்றச்சாட்டுகளை டிசிஎஸ் நிறுவனம் கடுமையாக மறுத்து வருகிறது ஆயினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதைக் கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US visa system will be down for another week

The US Embassy in New Delhi and its Consulate offices in Mumbai, Kolkata and Chennai have cancelled visa appointments scheduled for the next week with the State Department yet to set right a hardware glitch.
Story first published: Friday, June 19, 2015, 11:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X