டெல்லி: பொதுவாக மே மாதம் கோடை விடுமுறை என்பதால் இந்தியாவில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த வருடம் இக்காலகட்டத்தில் விமானப் பயணிகள் எண்ணிக்கை சுமார் 18.35 சதவீதம் உயர்ந்துள்ளது.
வழக்கம் போல் இவ்வருடமும் இண்டிகோ நிறுவனம் அதிகளவிலான பயணிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் சந்தையில் 3இல் ஒரு பங்கு பயணிகளைத் தனது வாடிக்கையாளராக வைத்துள்ளது.

மே மாத்தில் இந்திய விமான நிறுவனங்கள் சுமார் 71.27 லட்சம் பயணிகளைப் பெற்றுள்ளது, கடந்த வருடம் இதன் அளவு 60.22 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன பயணங்களில் 93.10 சதவீத டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது. இந்நிறுவனம் அறிவித்த சலுகைகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு அதிகளவிலான பயணிகளை அளித்துள்ளது.
இண்டிகோ 27.69 இலட்சம் பயணிகள், ஜெட் ஏர்வேஸ் 13.01 பயணிகளைக் கொண்டு சிறப்பான லாபத்தைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications