10 சதவீத வளர்ச்சி இந்தியாவிற்குச் சாத்தியமே.. வாஷிங்டனில் அருண் ஜேட்லி அதிரடி!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: இந்திய அரசு தற்போது செய்து வரும் பொருளாதாரச் சீர்திருத்தம், கொள்கை மாற்றங்கள், உள்கட்டமைப்புக்கான அதிகளவிலான முதலீடு, நிலைபெற்றிருக்கும் பருவநிலை மாற்றம் ஆகியவை இந்தியாவை அடுத்தச் சில வருடங்களில் 10 சதவீத வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி வாஷிங்டனில் தெரிவித்தார்.

 

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

அமெரிக்க முதலீட்டைக் கவர 9 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியில், " இந்தியா 10 சதவீத வளர்ச்சியை எட்ட அனைத்து வகையான சூழ்நிலையும் அமைந்துள்ளது, இது எந்த நிலையிலும் தடைப்படாது" எனத் கூறினார்.

நிலை பெறுவதில் பிரச்சனை

நிலை பெறுவதில் பிரச்சனை

மேலும் 10% இலக்கை அடைவது எளிமை என்றாலும் அதை அடுத்தச் சில வருடங்களுக்கு நிலை பெறுவது மிகவும் சவாலாக உள்ளது. இதனைக் களையவே முக்கியத் துறைகளில் முதலீடு அதிகரித்து வளர்ச்சியை நிலைப்பாட்டில் வைக்கிறோம்.

திட்ட மாற்றங்கள்

திட்ட மாற்றங்கள்

மத்திய அரசு செய்துள்ள மாற்றங்களின் மூலம் இந்தியாவில் கட்டமைப்பு, விவசாயம், தொழிற்துறைகளில் அதிகளவிலான முதலீட்டைக் கவர்ந்து வருகிறது.

பணவீக்கம்
 

பணவீக்கம்

இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் நிலை பெற்றுள்ளதால், விலைவாசிகள் சற்று்க் குறைந்துள்ளது. மேலும் பருவமழை துவங்கியுள்ளதால், உணவு பணவீக்கமும் அடுத்தச் சில மாதங்களில் கணிசமாகக் குறையும்.

பணவாட்ட நிலை

பணவாட்ட நிலை

மொத்த விலை பணவீக்கம் பார்க்கும் போது கடந்த 7 மாதமாகப் பணவாட்ட நிலையில் தொடர் உயர்வைச் சந்தித்து வந்தது. கடந்த மாதம் இதன் அளவு சற்று குறைந்து பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்தது.

அமெரிக்கப் பயணம்

அமெரிக்கப் பயணம்

9 நாள் பயணமாக அமெரிக்கச் சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன் நியூயார்க் பங்குச்சந்தையை மணியடித்து முடித்து வைத்தில் துவங்கிய பல முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Path to 10% growth not impossible: Jaitley

Noting that a new aspirational India expects early results and decisive governance, Finance Minister Arun Jaitley has exuded confidence that with the government pursuing economic reforms, policy changes, pumping in money in key sectors like infrastructure, along with a good monsoon, the path to 10 per cent growth is not impossible.
Story first published: Saturday, June 20, 2015, 12:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X