பெங்களூரு: ஞாயற்றுக்கிழமை நடந்த சர்வதேச யோகா தினத்தில் இந்தியாவில் யோகா கலை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து.
டெல்லி ராத்பாத் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களோடு மக்களாக யோகா செய்தது ஆச்சரியத்தை அளித்தார். சுமார் அரை மணிநேரத்தில் 15 ஆசனங்களைச் செய்தார் அசத்தினார் மோடி.
இன்றைய தினத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் சிறப்பான முறையில் கல்லா கட்டியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட்
இன்றைய தினத்தில் யோகா மேட்டிற்கான தேவை சுமார் 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் Gravolite, Aerolite, Lnt & Misr ஆகிய பிரான்ட் நிறுவன யோகா மேட்கள் சுமார் 1,400 வரை விற்பனையாகியுள்ளது எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
வெண்ணிலா மேடுகள்
மேலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வெண்ணிலா மேடுகளை விரும்புகிறார்கள், அதைத் தவிர நாற்றம் அற்ற, தண்ணிர் எதிர்ப்புத் தன்மை, அதிர்வுகளைத் தாங்கக்கூடிய மேட்டுகளை வாங்கியுள்ளார்கள்.
யுத் வாடிக்கையாளர்கள்
அதுமட்டும் அல்லாமல் 30 வயதிற்குக் குறைவாக வாடிக்கையாளர்கள் கலர் மற்றும் யோகா புகைப்படங்களைக் கொண்ட மேட்டுகளை விரும்பி வாங்கினர்.
ஷில்பா ஷெட்டி
மேலும் ஷில்பா ஷெட்டி செய்த யோகா டிவிடிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் தமிழ் பதிவு அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதாகப் பிளிப்கார்ட் நிறுவனம் கூறியது.
அதேபோல் பிரசவ காலத்திலும், பிரசவத்திற்குப் பின் செய்யவேண்டி யோகா டிவிடிகள் அதிகளவில் விற்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள்
இன்றைய தினத்தில் யோகா மேட்டுகள், டிவிடிகள் மட்டும் அல்லாமல், யோகா கலை சம்பந்தமான புத்தகங்களும் அதிகளவில் விற்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சத்யநந்த சரஸ்வதி எழுதிய ஆசனா பிரானயாமா முத்ரா பந்தா புத்தகம் எதிர்பராத அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
ஹெல்த் மற்றும் லைப்ஸ்டைல்
ஞாயற்றுக்கிழமை வர்த்தகத்தில் யோகா தின தாக்கத்தால் ஹெல்த் மற்றும் லைப்ஸ்டைல் பிரிவில் விற்பனை சிறப்பாக இருந்தது.
வாடிக்கையாளர்கள்
ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் நிறுவனத்தில் சுமார் 45 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களின் செயல்பாட்டை வைத்தே பிளிப்கார்ட் நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications