ஜூரிச்: சில வருடங்கள் முன்பு வரை சுவிஸ் வங்கிகளில், இந்தியர்கள் எவ்விதமான தடையின்றித் தங்களது கருப்புப் பணத்தைச் சர்வசாதாரணமாக முதலீடு செய்து வந்தனர்.
ஆனால் மத்திய அரசு நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் தீவரமாக இறங்கியுடன் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் இருப்பு அளவு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
இதன் எதிரோலியாக இந்நாட்டு வங்கி இருப்பு அளவில் இந்தியா 61வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா
இந்நாட்டு வங்கிகளின் மொத்த வைப்பு அளவான 1.6 டிரில்லியன் டாலரில் இந்தியர்கள் வெறும் 0.123 சதவீதத்தை மட்டும் பெற்று 61வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
பிரட்டன் மற்றும் அமெரிக்கா
இப்பிட்டியலில் பிரட்டன் மற்றும் அமெரிக்கா டாப் இரண்டு இடங்களைப் பல ஆண்டுகளாகத் தக்கவைத்துள்ளது. கருப்புப் பணத்தை ஒழிக்கும் திட்டத்தில் பிரட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளதால் இந்நாட்டின் இருப்பு அளவும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
பாகிஸ்தான்
சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் அதிகம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 73வது இடத்தைப் பிடித்துள்ளது.
இரு வங்கிகள்
இந்நாட்டில் யுபிஎஸ் மற்றும் கிரேடிட் சூசி ஆகிய இரு வங்கிகள் தான் கருப்புப் பணத்தை அதிகளவில் வைத்துள்ளது, குறிப்பாக இந்தியார்களின் மொத்த வைப்பில் 82 சதவீத பணத்தை இவ்வங்கிகள் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
10சதவீதம் சரிவு
2014ஆம் ஆண்டில் மட்டும் இந்தியர்களின் கருப்பு பணத்தின் அளவு சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளதாக அதாவது 12,615 கோடி ரூபாய்க் குறைந்துள்ளதாகச் சுவிஸ் நேஷ்னல் வங்கி புள்ளி விபரங்களைத் தெரிவிக்கிறது.
டாப் 10 நாடுகள்
சுவிஸ் வங்கிகளில் அதிகம் பணம் வைத்துள்ள டாப் 10 நாடுகளில் முதல் இடத்தைப் பிரட்டன் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, மேற்கு இந்தியா, Guernsey, ஜெர்மனி, பஹாமாஸ், Luxembourg, பிரான்ஸ், ஜெர்சி மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications