டெல்லி: 2015ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தையின் அன்னிய முதலீட்டு அளவு 100 சதவீதம் அதிகரித்து 3.60 பில்லியன் டாலராக உள்ளது எனத் தொழில்துறை கொள்கை மற்றும் முன்னேற்றம் துறை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கிறது.
கடந்த வருடம் இதேகாலகட்டத்தில் அன்னிய முதலீட்டு அளவு 1.70 பில்லியன் டாலராக மட்டும் இருந்தது, மேலும் மார்ச் மாதத்தில் இதன் அளவு 40 சதவீதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
டாப் 10 துறைகள்
இந்திய சந்தையில் கிடைத்த 3.06 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டில் நாட்டின் சிறந்த 10 துறைகளில் மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை 709 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றது.
அதைத்தொடர்ந்து ஆட்டோமொபைல் ( 655 மில்லியன் டாலர்), வர்த்தகம் ( 441 மில்லியன் டாலர்), சேவைத்துறை ( 217 மில்லியன் டாலர்) மற்றும் பவர் ( 109 மில்லியன் டாலர்) .
சிங்கப்பூர்
இக்காலகட்டத்தில் இந்திய சந்தையில் சிங்கப்பூர் 1.13 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. அதன் பின் மொரிஷியஸ்(907 மில்லியன் டாலர்), அமெரிக்கா (392 மில்லியன் டாலர்) மற்றும் நெதர்லாந்து (374 மில்லியன் டாலர்).
நிதி உள்ளீடு
2014-15ஆம் நிதியாண்டில் அன்னிய முதலீட்டு அளழு 27 சதவீதம் அதிகரித்து 30.93 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 24.29 பில்லியன் டாலராக இருந்தது.
1 டிரில்லியன் டாலர் முதலீடு தேவை..
மத்திய அரசின் கணிப்பின் படி நாட்டின் உள்கட்டமைப்பு, துறைமுகம், விமான நிலையம் மற்றும் நெடுஞ்சாலை ஆகியவற்றை மேம்படுத்த 1 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
அன்னிய முதலீட்டு ஈர்ப்பு
இந்தியாவில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கவும், முக்கியத் துறைகளை மேம்படுத்தவும் துறை சார்ந்த முதலீட்டு அளவை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதில் பாதுகாப்புத் துறையில் துவங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, போன்ற பல துறைகளில் அன்னிய முதலீட்டை உயர்த்தியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications