10% பங்குகளை விற்று 400 மில்லியன் டாலர் நிதிதிரட்டும் இண்டிகோ!
மும்பை: நாட்டின் முன்னணி பயணிகள் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனம் தனது விரிவாக்க பணிகளுக்காக 10 சதவீத பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளது.
இவ்விற்பனையின் மூலம் சுமார் 400 மில்லியன் டாலர் வரை நிதித்திரட்ட இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்நிறுவனம் தனது பங்குகளை ஐபிஓ சந்தையில் விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிகளை அடுத்த 60 நாட்களில் பெறப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனப் பங்குகள் புத்தக மதிப்பை விடவும் 8 மடங்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவின் படி இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3,242 கோடி ரூபாய் என்ற அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சக போட்டியாளரான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.1,115 கோடியாகும்.


Click it and Unblock the Notifications