மும்பை: சர்வதேச மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் தனக்கென நீங்கா இடத்தைப் பிடித்துள்ள மைக்ரோமாக்ஸ் நிறுவனம் 25 சதவீத பங்குகளை அலிபாபா நிறுவனத்திடம் விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இப்பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் இந்திய மொபைல் போன் உற்பத்தியில் முதலீடு செய்த முதல் பன்னாட்டு நிறுவனம் என்ற பெயரை அலிபாபா பெறும்.
சந்தை விரிவாக்கம்
சர்வதேச சந்தைகளில் மைக்ரோமாக்ஸ் நிறுவனத்தின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் சீனா மற்றும் அமெரிக்கச் சந்தையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அலிபாபாவுடன் இணைய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலகின் டாப் 10 மொபைல் விற்பனை நிறுவனங்களில் மைக்ரோமாக்ஸ் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
4,200 கோடி ரூபாய்
மைக்ரோமாக்ஸ் விற்பனை செய்ய முன்வரும் 25 சதவீதம் பங்குகளின் மதிப்பு 700 மில்லியன் டாலர், ஆதாவது 4,500 கோடி ரூபாயாகும்.
ஜாப்பான் நிறுவனம்
மேலும் இந்த ஒப்பந்தத்தில் அலிபாபா நிறுவனத்தின் 32 சதவீத பங்குகளை வைத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாப்ட்பாங்க் நிறுவனமும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
3.5 பில்லியன் டாலர்
மைக்ரோமாக்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 3.5 பில்லியன் டாலராகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் படி இதன் மதிப்பு 21,000 கோடி ரூபாயாகும்.
இந்த ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தை குறித்து மைக்ரோமாக்ஸ், அலிபாபா மற்றும் சாப்ட்பாங்க் ஆகிய மூன்று நிறுவனங்களும் எவ்விதமான தகவல்களையும் அளிக்க மறுத்துவிட்டது.
7,000 கோடி வருமானம்
2014ஆம் நிதியாண்டில் மைக்ரோமாக்ஸ் நிறுவன தயாரிப்புகள் உலக நாடுகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றதால், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 7,142 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications