பெங்களூரு: இந்தியாவில் மிகப்பெரிய காஃபி தொடர் கடைகள் நிறுவனமான கேப் காஃபி டே, பங்குச்சந்தையில் குதித்து 1,150 கோடி ரூபாய் வரை நிதிதிரட்ட சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது.
இத்தொகையைக் கொண்டு நிறுவனத்தின் 633 கோடி ரூபாய் கடனை தீர்க்க முடிவு செய்துள்ளது சிசிடி.
நிறுவன வரிவாக்கம்
பங்குச்சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் இந்நிறுவனம் பெறப்படும் 1,150 கோடி ரூபாய் முதலீட்டில், 633 கோடி ரூபாயை கடன் தீர்க்கவும், 288 கோடி ரூபாய் நிறுவன விரிவாக்கத்திற்காகவும், மீதமுள்ள தொகையைக் கார்ப்பரேட் தொகையாக வைத்துக்கொள்ளச் சிசிடி முடிவு செய்துள்ளது.
பங்கு இருப்புகள்
இன்றைய நிலையில் இத்தொடர் கடைகளில் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான விஜி. சித்தார்த்தா அவர்கள் 54.78 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
இதுபோக இன்போசிஸ் நிறுவனத்தின் துனண நிறுவனரான நாதன் நீலக்கேனி 1.77 சதவீத பங்குகளையும், தனியார் முதலீட்டு நிறுவனமான கேகேஆர் சிசிடி-யில் 3.43 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
நிறுவன துவக்கம்
இந்நிறுவனம் பெங்களூரில் 1996ஆம் ஆண்டு முதன் முதலாகத் துவங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் 209 நகரங்களில் 1,472 கிளைகளைக் கொண்டு இந்நிறுவனம் வர்த்தகம் செய்து வருகிறது.
11 கோடி நஷ்டம்
2014ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்நிறுவனம் 882 கோடி வருமானத்தைப் பெற்று 11 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.
வங்கிகள்
இந்நிறுவனப் பங்குச்சந்தையில் இறங்கும் பணிகளில் கோட்டாக் முதலிட்டு வங்கி, சிட்டி குரூப், மார்கன் ஸ்டான்லி, ஆக்சிஸ் கேப்பிடல், எட்லீவிஸ் மற்றும் யெஸ் வங்கி ஆகியவை இடம்பெறுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications