தபால் துறையின் வங்கி சேவைக்கு ஆகஸ்டில் லைசென்ஸ்: ரவி சங்கர் பிரசாத்
டெல்லி: இந்திய தபால் துறை, வங்கிச் சேவை துவங்குவதற்கான உரிமத்தை ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி அளிக்க வாய்ப்புள்ளதாக மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதன் மூலம் தபால் துறை இந்தியாவில் 1,54,000 கிளைகளில் வங்கிச் சேவை அளிக்கு முடியும். அதுமட்டும் அல்லாமல் அது முற்றிலும் மத்திய அரசு இணைந்திருப்பதால் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாகவும், டெப்பாசிட்களுக்கான வட்டி அதிகமாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த 1,54,000 கிளைகளில் 1,30,000 கிளைகள் கிராமப்புறங்களில் உள்ளது. வங்கி சேவைக்காக, கடந்த ஓராண்டில் 27,215 அஞ்சல் நிலையங்களை, கம்ப்யூட்டர் வழியாக ஒன்றிணைக்கப்பட உள்ளது.
முன்னதாக, இந்திய அஞ்சல் துறை, சிறிய அளவிலான வங்கியைத் தொடங்க, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications