டெல்லி: உலகின் மிகப்பெரிய விமான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டியுள்ளது.
இதுகுறித்து ஏர்பஸ் டிபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் Bernhard Gerwert செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தார்.

சில வாரங்களுக்கு முன்பு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, டுலூஸ் பகுதியில் அமைந்துள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் கிளையைப் பார்வையிட்டார். இப்போது அங்குள்ள இந்திய பணியாளர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

இச்சந்திப்பில் இந்தியாவில் ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை மற்றும் சிவில் ஏவியேஷன் துறை சார்ந்த திட்டங்களை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆலோசனை செய்ததாகப் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த 5 வருடத்தில் சிறிய ரக விமானங்கள் உற்பத்தி ஏர்பஸ் நிறுவனத்தின் மூதலீடு 400 மில்லியன் டாலரில் இருந்து 2 பில்லியன் டாலர் வரை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ஏர்பஸ் நிறுவனத்தின் 2 கிளைகளில் சுமார் 400 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications