சென்னை: ஐரோப்பிய சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கிரீஸ் நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டைக் குறித்து உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
இந்நிலையில் கிரீஸ் நிலைப்பாடு ஆசிய சந்தையைப் பாதிக்குமே தவிர இந்திய சந்தையை நேரடியாகப் பாதிக்காது என இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமாணியம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரவிந்த் சுப்ரமாணியம்
அரவிந்த் சுப்ரமாணியம் அவர்களின் அறிவிப்பின் மூலம் முதலீட்டாளர்களுக்கு இந்திய சந்தையின் மீது நம்பிக்கை அதிகரித்தது.
தற்போது இந்திய சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவுகள் அனைத்தும் ஆசிய சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைப் பொருத்தே அமைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ராஜீவ் மெஹ்ரிஷி
இதன் மூலம் இந்தியாவில் இருந்து அன்னிய முதலீடுகள் கணிசமாக வெளியேறவும் வாய்ப்புள்ளதாக நிதித்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி தெரிவித்தார். இதனைத் தடுக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சந்தா கோச்சார்
இதுகுறித்து இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார், "ஐசிஐசிஐ வங்கி ஐரோப்பிய சந்தையில் அதிகளவிலான வெளிப்பாடு இல்லை என்பதால் கிரீஸ் நிலைப்பாடு வங்கியைப் பாதிக்காது. மேலும் இவை இந்தியை சந்தையும் பாதுக்காது." என வங்கி வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசினார்.
உலகப் பொருளாதாரம்
அடுத்த வாரம் நடைபெற உள்ள பொது வாக்கெடுப்பில் கிரீஸ், ஐரோப்பிய கூட்டணியில் இருந்து விலகுவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.
கிரீஸ் ஐரோப்பிய நாடுகள் கூட்டணியில் வெளியேறினால் ஐரோப்பிய சந்தையில் மட்டும் அல்லாமல் உலகப் பொருளாதாரத்திலும் குறிப்பிடும்படியான மாற்றங்கள் ஏற்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications