டெல்லி: இந்திய மக்கள் அனைவருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் பயன்களை கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம் மிகப்பெரிய அளவில் இன்று துவங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கனவு திட்டங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பங்கெடுக்க இந்திய நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் அடுத்த 10 வருடங்களில் 100 பில்லியன் டாலர் முதலீடு வரை பெற முடியும் எனச் சந்தை ஆய்வு நிறுவனங்கள் கூறுகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு வந்த பெரும்புள்ளிகளை இப்போது பார்ப்போம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்தியாவின் டாப் பணக்காரர்களின் முதன்மையான முகேஷ் அம்பானி இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு முதலாவதாக பேசினார். இவர் ரிலையன்ஸ் இண்யஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராவார்.
குமார் மங்களம் பிர்லா
ஆடை முதல் தொழில்நுட்பம் வரை அனைத்து துறையிலும் சிறந்து விளங்கும் ஆத்தியா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார மங்களம் பிர்லா -வும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
சுனில் மிட்டல்
இவர் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
அனில் ஆம்பானி
ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் அனில் அம்பானி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அசிம் பிரேம்ஜி
இந்தியாவில் அதிகளவில் நன்கொடை அளித்த டாப் 10 பணக்காரர்களில் ஒருவர் தான் அசிம் பிரேம்ஜி. இவர் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தின் தலைவர்.
சைரஸ் மிஸ்திரி
டாடா குழும நிறுவனங்களின் தலைவரான சைரஸ் மிஸ்திரி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டார்.
பவன் முஞ்சால்
நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹிரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அனில் அகர்வால்
இந்தியாவின் மிகப்பெரிய கனிமவள நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் துவக்க விழாவில் தாய் மொழி ஹிந்தியில் பேசினார்.
ஹரி ஒம் ராய்
மொபைல் மற்றும் டேப்லெட் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனமான LAVA டெல்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ஹரி ஒம் ராய் அவர்களும் கலந்துகொண்டார்.
பிற தலைவர்கள்
டெல்டா நிறுவனம், நீடெக் கார்பரேஷன், ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவர்களும் இந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
முக்கியத் தலைவர்கள்
மேலும் இந்நிகழ்ச்சியில் தொலைத்தொடர்பு துறையின் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரும் கலந்து கொண்டு இத்திட்டத்தின் சிறப்புகளைப் பற்றிப் பேசினார்கள்.


Click it and Unblock the Notifications