மும்பை: பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் செயல்படும் மெப்ஸிஸ் பீபிஓ நிறுவனத்தின் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.
பங்குச்சந்தைக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனம், மெப்ஸிஸ் மற்றும் அதன் கிளை நிறுவனமான MsourceE இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளைக் கையகப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ்
இதுகுறித்து HGS நிறுவனம் கூறுகையில் பங்குகளைக் கையகப்படுத்தியதன் மூலம் புதிய வாய்ப்புகள் மற்றும் நிறுவன விரிவாக்கம் பணிகளை எளிமையாக எதிர்கொள்ள முடியும் என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பார்தா டீசார்கார் தெரிவித்தார்.
10% வளர்ச்சி
மெப்ஸிஸ் பீபிஓ நிறுவனத்தின் 17 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் HGS நிறுவனத்தின் வர்த்தகம் சுமார் 10 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா வேண்டாம்
கடந்த மார்ச் மாத நிலவரத்தின் படி மெப்ஸிஸ் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறத் திட்டமிடுவதாகவும், அதற்க நாட்டின் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து குறைத்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் செயல்பாடு வரலாறு காணாத அளவிற்குச் சரிவை தழுவியது.
அதே போன்ற நிலையில் தான் HGS நிறுவனமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
160 கோடி ரூபாய் வருவாய்
இன்றைய நிலையில் HGS நிறுவனம் வருடத்திற்கு 140 - 160 கோடி ரூபாய் வருவாய் பெற்று வருகிறது. ஆனால் மெப்ஸிஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள அளவு வெறும் 17 கோடி ரூபாய் என்றாலும் புதிய வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
7,000 பணியாளர்கள்
HGS நிறுவனத்தின் தகவல் படி வங்கியியல் மற்றும் டெலிகாம் துறையில் சுமார் 5 வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் நொய்டா, ராய்ப்பூர், இந்தூர், மங்களூர், புனே மற்றும் பெங்களூரு ஆகிய 7 இடங்களில் டெலிவரி சென்டர்களை வைத்துள்ளது.
மேலும் இந்நிறுவனத்தில் சுமார் 7,000 ஊழியர்கள் பணியாற்றிகின்றனர்.
உள்நாட்டுப் பிரச்சனை
இப்பங்குகள் கைப்பற்றுதலின் மூலம் இந்தியாவில் பீபிஓ துறையில் ஏற்பட்டுள்ள வர்த்தகச் சரிவு மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
பங்குச்சந்தை
இரு நிறுவனங்களும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலீடப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.15 சதவீதம் வரை உயர்ந்தது. அதேபோல் மெப்ஸிஸ் நிறுவனம் 0.17% வரை உயர்ந்தது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications