டெல்லி: இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற அவ்வப்போது புதிய புதிய சலுகைகள் வழங்குவது வழக்கம்.
தற்போது பேகேஜ் குறைவாக இருக்கும் பயணிகளுக்கு, அதாவது ஹேண்ட் பேகேஜ் மட்டும் வைத்துள்ள பயணிகளின் ஒரு வழி பயணக் கட்டணத்தில் (One way trip) 200 ரூபாயும், இருவழி பயணத்தில் (Round trip) 1,000 ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஆனால் இச்சலுகையைப் பெற 30 நாட்களுக்கு முன் பயணிகள் தங்களது பயணத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.
விமானங்களின் எரிபொருளை சேமிக்கவும், சுற்றுச்சூழலை காக்கவும் இத்தகைய சலுகையை அறிவித்துள்ளோம் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் அளித்த தகவலின் படி பயணிகள் 7 கிலோ வரையிலான பேகேஜ் ஒன்றையும், தோலில் மாட்டிக்கொள்ளும் வசதி உடைய ஒரு பே கட்டணமில்லா பேகேஜ் பரிவில் அனுமதி அளிக்கப்படுகிறது. 10 கிலோ வரை அதிகமாகக் கொண்டு செல்லும் பயணிகள் 500 ரூபாயும், 15 கிலோ வரை கொண்டு செல்ல 750 ரூபாய் செலுத்த வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications