பெய்ஜிங்: சர்வதேச நாடுகளின் வளர்ச்சிகளை அவ்வப்போது கணிக்கும் உலக வங்கி, 2015ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த வளர்ச்சி 7.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் வளர்ச்சி திட்டங்கள், முதலீட்டு அளவு போன்ற பல காரணிகளைக் கொண்டு உலக வங்கி ஒரு நாட்டின் வளர்ச்சி விகிதத்தைக் கணிக்கிறது. இத்தகைய தகவல்களைக் கொண்டே அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைச் செய்வோர்.
2015ஆம் ஆண்டு
இவ்வாண்டில் சீனாவின் வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது, இது கடந்த நிதியாண்டை விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2016ஆம் ஆண்டில் 7.0 சதவீதமாகவும், 2017ஆம் ஆண்டில் 6.9 சதவீதமாகவும் இருக்கும் எனத் தெரிகிறது.
வட்டி விகிதம்
நாட்டில் முதலீட்டை அதிகரிக்கவும், பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் சீன கடந்த 8 மாதங்களில் 4வது முறையாக மீண்டும் தனது வட்டி விகித்ததைக் குறைந்துள்ளது சீன அரசு.
ஆசியா உள்கட்டுமான வளர்ச்சி வங்கி
100 பில்லியன் டாலர் மிதிப்புள்ள ஆசியா உள்கட்டுமான வளர்ச்சி வங்கியை சீனா தலைநகர் பெய்ஜிங்-இல் 50 நாடுகள் கூட்டணியில் திங்கட்கிழமை துவங்கப்பட்டது.
குறைந்த கால வளர்ச்சி
2015ஆம் ஆண்டுக்கான ஆய்வில் உலக வங்கி சர்வதேச நாடுகளைக் குறைந்த கால ஆண்டு வளர்ச்சியின் அடிப்படையில் பட்டியலிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மந்தமான பொருளாதாரம்
தற்போதுள்ள நிலையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் மந்தமான நிலையை எட்டும்போது வேலைவாய்ப்புகளை விடவும், பணியாளர்களின் சம்பளம் அதிகளவில் பாதித்து வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications