மும்பை: கடந்த ஒரு வார வர்த்தகத்தில் கிரீஸ் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக ஐரோப்பிய சந்தை அதிகளவில் பாதித்துள்ளது. இதனால் நாணய வர்த்தகத்தில் யூரோ மதிப்பு தாறுமாறாகக் குறைந்தது.
இதன் காரணமாக இவ்வாரத்தின் முழு வர்த்தகத்தில் இந்திய சந்தையில் குறிப்பிடப்படும் அளவில் முதலீடு கிடைத்ததால், சர்வதேச நாணய சந்தையில் ரூபாய் மதிப்பு நான்கு நாட்களாகத் தொடந்து அதிகரித்து வருகிறது.
2 மாத உயர்வு
இன்று காலை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராகச் சுமார் 63.37 ரூபாய் வரை உயர்ந்து மே 6ஆம் தேதியின் வர்த்தக நிலையை எட்டி இரண்டு மாத உயர்வை பதிவு செய்ததுள்ளது.
மும்பை பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய காலை வர்த்தகத்தில் 170 புள்ளிகள் வரை உயர்ந்தது. அதன் பின் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
வாரத்தின் கடைசி நாளான இன்று மதியம் 1.40 மணியளவில் சென்செக்ஸ் 104.37 புள்ளிகள் உயர்ந்து 28,050.17 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி குறியீடு 24.95 புள்ளிகள் உயர்ந்து 8,469.85 புள்ளிகளை அடைந்தது.
யுஎஸ் ஜாப் டேட்டா
அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு எதிரொலி போன்ற பல்வேறு காரணங்களால் வேலைவாய்ப்பு அளவு குறைந்துள்ளதாக.யுஎஸ் ஜாப் டேட்டா தகவல் தெரிவிக்கிறது.
ஆசியா சந்தை
ஐரோப்பிய சந்தையில் வர்த்தகம் மற்றும் முதலீடு குறைந்ததால், ஆசிய சந்தையில் நாணய மதிப்பு மற்றும் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications