டெல்லி: இந்தியாவில் மலிவு விலை விமானச் சேவை அளிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திங்கட்கிழமை மீண்டும் விலை போரை துவங்கியுள்ளது. இதனால் பிற விமான நிறுவனங்களுக்கு இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது.
1,899 ரூபாயில் விமானப் பயணம்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் மும்பை,கோவா, அகமதாபாத்,பெங்களூர், ஹைதராபாத், சென்னை, புனே ஆகிய இடங்களுக்கு வெறும் 1,899 ரூபாயில் பயணம் செய்யப் புதிய சுலுகையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இரண்டு நாள் மட்டுமே
இக்கட்டணச் சலுகை திங்கட்கிழமை இரவு தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி இரவு 12 மணி வரை மட்டுமே இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சலுகை
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இணையதளங்கள் மற்றும் விமானப் பயண முகவர்களிம் மட்டுமே இக்கட்டணச் சலுகையைப் பயணிகள் பெற முடியும். விமான நிலையங்களில் இச்சலுகை கட்டண டிக்கெட்டுகள் வழங்கப்படமாட்டாது.
ஜூலை 15
இச்சலுகையைப் பெற பயணிகள் தங்களின் பயணத்தை ஜூலை 15 முதல் 30 ஆம் தேதி வரையிலான காலத்தில் தங்களத பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஏர்ஏசியா
அதேபோல் ஏர்ஏசியா நிறுவனமும் வாடிக்கையாளர்களைக் கவர 999 என்ற கட்டண சலுகையை அறிவித்திருந்தது. இதற்கு எதிராகவே ஸ்பைஸ்ஜெட் தற்போது விலை போரை துவங்கியுள்ளது.
அடுத்தச் சில நாட்களில் பிற நிறுவனங்களும் கட்டண சலுகையை அறிவிக்கலாம்.
ஏர்ஏசியா சலுகை
இச்சலுகை ஜுலை 19ஆம் தேதி வரையில் மட்டுமே இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டணம்
இந்நிறுவனம் அறிவித்துள்ள 999 ரூபாய் கட்டணம் பெங்களூரு-கோவா, பெங்களூரு-கொச்சி, பெங்களூரு-பூனே மற்றும் கவுகாத்தி-இம்பால் ஆகிய வழித்தடங்களில் மட்டுமே பொருந்தும்
பிற வழித்தடங்கள்
பெங்களூரு-விசாகப்பட்டினம் ரூ.1,490, பெங்களூரு-ஜெய்ப்பூர் ரூ.2,490, பெங்களூரு-சண்டிகார் ரூ.2,490 மற்றும் பெங்களூரு-டெல்லி ரூ.3,290 ஆகிய கட்டணங்களில் விமானச் சேவை அளிக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications