ரூ. 203 கோடி மதிப்புள்ள 3.25 கோடி பங்குகளை விற்கும் முகேஷ் அம்பானி!

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும நிறுவனங்களில் ஒன்றான நெட்வொர்18 மீடியா மற்றும் முதலீடு நிறுவனத்தின் 3.1 சதவீத பங்குகளை (3.25 கோடி பங்குகள்) விற்க இக்குழுமம் முடிவு செய்துள்ளது.

203 கோடி ரூபாய்

203 கோடி ரூபாய்

நிறுவனச் சட்டத்தின் படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு இருப்பு அளவை சரிசெய்ய முகேஷ் அம்பானி தனது பங்குகளை விற்க உள்ளார். இதன் மொத்த மதிப்பு 203 கோடி ரூபாய்.

25 சதவீத பங்குகள்

25 சதவீத பங்குகள்

இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனம் 25 சதவீத பங்குகளைப் பொது உடமையில் விற்பனை செய்ய வேண்டும் என்பது முக்கியச் சட்ட விதிமுறைகளில் ஒன்று . இதற்கு இணங்க ரிலையன்ஸ் குழுமம் தனது பங்கு அளவை சரி செய்வதாகத் திங்கட்கிழமை பங்குச் சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

கடந்த வருடம் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மீடியா நிறுவனமான நெட்வொர்க்18 என்னும் நிறுவனத்தின் அதிகளவிலான பங்குகளைக் கைப்பற்றியது.

நெட்வொர்க்18

நெட்வொர்க்18

நெட்வொர்க்18 நிறுவனம் இந்தியாவில் செய்தி நிறுவனம், ஈகாமர்ஸ் தளம் போன்ற பல துறைகளில் ஈடுப்பட்டு வருகிறது.

திங்கட்கிழமை வர்த்தகம்

திங்கட்கிழமை வர்த்தகம்

நேற்றைய வர்த்தக முடிவில் இந்நிறுவனத்தின் 3.1 சதவீத பங்குகள் 203 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+