கிராமப்புற பெண்களுக்காக 'இண்டர்நெட் சாதி' திட்டம்: டாடா-கூகிள் கூட்டணியில் துவக்கம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடந்த 15 வருடத்தில் இந்தியா மிகப்பெரிய அளவிலான மாற்றத்தைச் சந்தித்தாலும், கிராமப்புறங்கள் குறைவான வளர்ச்சி மட்டுமே சந்தித்துள்ளது. இந்தியாவில் சரிபாதி மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு கிராமப்புறங்கள் தான்.

 

இண்டர்நெட் சேவை மற்றும் அதன் பற்றிய புரிதலை அளிப்பதன் மூலம் கிராமப்புற மக்கள் புதிய வாய்ப்புகளைத் தேடிக்கொள்வார்கள், குறிப்பாகக் கிராமப்புற பெண்களுக்கும் உதவிகரமாக அமைய டாடா டிரஸ்ட் மற்றும் கூகிள் நிறுவனம் இணைந்து 'இண்டர்நெட் சாதி' (Internet saathi) என்னும் திட்டத்தைத் துவங்கியுள்ளது.

1,000 சைக்கிள்கள்

1,000 சைக்கிள்கள்

டாடா டிரஸ்ட் மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து கிராமப்புற பெண்களுக்காகப் புதிய வசதியை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தில் 1,000 சைக்கிள்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

சைக்கிள்?

டப்பாவில் டெக்னாலஜி

டப்பாவில் டெக்னாலஜி

இந்தச் சைக்கிளில் ஐ-பேடு, லேப் டாப், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் அடங்கிய ஒரு பெட்டி இருக்கம், இதனுடன் தகவல் தொழில்நுட்பம் குறித்துக் கற்பிக்கும் ஆசிரியரும் செல்வார்.

4,500 கிராமங்கள்

4,500 கிராமங்கள்

இதன் மூலம் 4,500 கிராமங்களில் 5 லட்சம் கிராமப் பெண்களுக்கு இணையதளம் பற்றிய புரிதலையும், பயன்பாட்டு முறையை அறிவுறுத்தப்படும்.

`இண்டர்நெட் சாதி’
 

`இண்டர்நெட் சாதி’

`இண்டர்நெட் சாதி' என்ற பெயரிலான இத்திட்டத்தில், தொழில்நுட்பத்தைக் கற்றுத் தருவோர் இந்தியாவில் உள்ள 4500 கிராமங்களுக்குச் செல்வார்கள். இதன் மூலம் கிராமப்புற பெண்கள் தகவல் தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ள நிலை மாறும், புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில்கள் துவங்க இத்துட்டம் ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரத்தன் டாடா மற்றும் ராஜன் ஆனந்தன்

ரத்தன் டாடா மற்றும் ராஜன் ஆனந்தன்

இத்திட்டத்தை டாடா குழும நிறுவனங்களின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆசிய மற்றும் இந்திய கிளை துணை தலைவர் ராஜன் ஆனந்தன் மும்பையில் துவக்கி வைத்தனர்.

குஜராத்

குஜராத்

இந்தத் திட்டம் முதல் கட்டமாகக் குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்டு ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்குப் பின் பிற மாநிலங்களுக்கு இச்சைக்கிள்கள் ஓடும்.

தமிழ்நாட்டிற்கு எப்போ வரும்?

18 மாதங்கள் மட்டுமே

18 மாதங்கள் மட்டுமே

நாடு முழுவதும் 4,500 கிராமங்களில் 18 மாதங்களில் இந்தச் சேவை அளிக்கத் இக்கூட்டணி திட்டமிடப்பட்டுள்ளது.

கூகிள்

கூகிள்

நகர்ப்பகுதிகளில் உள்ள பெண்கள் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவான வளர்ச்சியை எட்டி வருகின்றனர். இத்தகைய வசதி எட்டாக்கனியாக உள்ளதால் கிராமப்பகுதி பெண்கள் மற்றும் மக்கள் பின்தங்கியுள்ளனர்.

இந்த நிலையைப் மாற்றியமைக்க 'இண்டர்நெட் சாதி' உறுதுணையாக இருக்கும் என ராஜன் ஆனந்தன் கூறினார்.

இன்டெல்

இன்டெல்

இத்திட்ட முயற்சிக்கு இன்டெல் நிறுவனம் ஆரம்பக் கட்ட வசதிகளை அளிப்பதாக ராஜன் குறிப்பிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Trusts, Google team up to get more rural women on Net

Tata Trust, a non-sectarian philanthropic organisation of Tata Group, has tied up with Google India to provide Internet facilities to rural women so that they can use it in their daily lives.
Story first published: Tuesday, July 7, 2015, 9:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X