ஜூன் மாதத்தில் கார் விற்பனை 1.53% உயர்வு!
டெல்லி: உள்நாட்டுச் சந்தையில் ஜூன் மாதம் கார் விற்பனை 1.53 சதவீதம் அதிகரித்து 1,62,677 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இதன் எண்ணிக்கை 1,60,232 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேகாலகட்டத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் சுமார் 3.55 சதவீதம் அதிகரித்து 13,07,710 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வந்தாலும், வாகன விற்பனை குறையவில்லை. மேலும் தற்போது மக்கள் அதிகளவில் புதிய வாகனங்களை வாங்க துவங்கியுள்ளனர். இதனால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் அரசு மற்றும் மக்கள் செயல்பட வேண்டும்.
மேலும் வர்த்தக வாகன பிரிவில் ஜூன் மாதத்தில் 51,446 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications