மும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, தனது வீட்டுக் கடன் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்கத் திட்டமிட்டுள்ளது. இன்றைய நிலையில் ஐசிஐசிஐ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டாலர் அதாவது 4,400 கோடி ரூபாய்.
வெள்ளிக்கிழமை இந்நிறுவன அறிவிப்பின் படி ஐசிஐசிஐ வங்கி தனது கிளை நிறுவனமான ஐசிஐசிஐ ஹோம் பைனான்ஸின் பங்குகள் விற்கும் பணிக்காகச் சிட்டிபாங்க் நிறுவனத்தை நியமித்துள்ளது.

சிட்டி பாங்க், இந்நிறுவனப் பங்குகளை வாங்கக்கூடிய தகுதியான முதலீட்டாளர்களைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது.
ஐசிஐசிஐ ஹோம் பைனான்ஸ் நிறுவன பங்குகளை வாங்க இந்திய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வருவதாகச் சிட்டி பாங்க் தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி விட்டுக்கடன் சேவையை மிகவும் குறைவான அளவிலேயே ஐசிஐசிஐ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் மூலம் அளிப்பதால் இந்நிறுவனப் பங்குகள் விற்று நிதிதிரட்டும் யோசனையில் இறங்கியுள்ளது.
மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள தகவலின் படி ஐசிஐசிஐ வங்கி அளித்துள்ள மொத்த கடன் அளவில் வெறும் 10 சதவீதம் மட்டுமே ஐசிஐசிஐ ஹோம் பைனான்ஸ் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications