டெல்லி: வங்கித் துறையில் வட்டி விகித குறைப்பை வேண்டியும், மிதமான வேகத்தில் வளர்ந்த உற்பத்தி துறையின் வளர்ச்சி காரணமாக மே மாதத்தில் இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி அளவு 2.7% மட்டுமே பதிவு செய்துள்ளது.
மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மே மாதம் நாட்டின் மொத்த தொழிற்துறை உற்பத்தி அளவு 2.7 சதவீதமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இதன் அளவு 3.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வருட காலத்தில் இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி 5.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொழிற்துறை உற்பத்தியில், உற்பத்தி துறையின் 75 சதவீதம் பெறுகிறது. பிற துறைகள் அனைத்தும் 25 சதவீத சந்தையைப் பெறுகிறது.
மே மாதத்தில் உற்பத்தி துறை சுமார் 2.2 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 5.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்காலகட்டத்தில் சுரங்கம் மற்றும் மின்சாரத் துறையின் உற்பத்தி வளர்ச்சி சிறப்பாக இருந்தது.


Click it and Unblock the Notifications