டெல்லி: இந்திய தபால் துறையின் பார்சல் சேவையின் வருவாய் -2% இருந்து 2014-15ஆம் ஆண்டில் 37 சதவீதமாக அதிகரித்துப் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தான்.
ஈகாமர்ஸ் நிறுவனங்கள்
கடந்த நிதியாண்டில் அமேசான், ஸ்னாப்டீல் மற்றும் பே-டிஎம் நிறுவனத்தின் பொருட்களைத் தனது வாடிக்கையாளர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியில் இந்திய தபால் துறை இணைந்தது. இதன் பின் இச்சேவையின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
மேம்பாடு
ஈகாமர்ஸ் துறைச் சேவையை மேம்படுத்த இந்திய தபால் துறையில் மத்திய அரசு பல கோடி ரூபாய் முதலீடு செய்ய மேம்படுத்தி வருகிறது.
வருவாய் அதிகரிப்பு
கடந்த ஒரு வருடத்தில் இந்திய தபால் துறை பல புதிய சேவைகளை அறிவித்தது. குறிப்பாக ஸ்டாப், டெலிவரி போன்ற சேவைகளின் மூலம் அதிகளவிலான வருவாய் கிடைத்துள்ளது.
வங்கி சேவை
ரிசர்வ் வங்கி தபால் துறைக்குப் பேமென்ட் வங்கி சேவை அளிக்க உரிமம் வழங்கும் திட்டத்தில் உள்ள நிலையில் இத்துறையின் 2590 கிளைகளில் வங்கி சேவை அளிக்கத் துவங்கியுள்ளது.
அடுத்தச் சில வருடங்களில் இந்தியா முழுவதும் இச்சேவை விரிவாக்கப்படும்.
ஈகாமர்ஸ் துறை
இத்துறைக்கு இந்திய தபால் துறை மிகப்பெரிய உதவியாக இருக்கும். தற்போதுள்ள நிலையில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் முக்கிய நகரங்களுக்கு மட்டுமே தனது பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.
தபால் துறையுடன் இணைவதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்குத் தனது பொருட்களைக் கொண்டு சேர்க்க முடியும்.
முதலீடு
மத்திய அரசு இதுவரை தபால் துறை அலுவலகங்களை மேம்படுத்த 5,000 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதேபோல் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வேன் மற்றும் வாகனங்களைத் தபால் துறை வாங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications