சென்னை: உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த பொருளாதார நாடான சீனா, பொருளாதார வளர்ச்சியில் தேக்கமடைந்து தொடர்ந்து சரிவு பாதையை நோக்கி பயணம் செய்கிறது.
இதனால் இந்தியாவிற்கு அதிகப்படியான அன்னிய முதலீடு கிடைக்கும் என ஒரு பக்கம் கனவு கண்டாலும், மறுபக்கம் முக்கியத் துறைகள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.
அசோசாம்
சீன பொருளாதார வீழ்ச்சியில் இந்திய ஐடி மற்றும் ஸ்டீல் உற்பத்தி துறைகள் அதிகளவில் பாதிப்படையும் எனத் தொழில்துறை கூட்டமைப்பான அசோசாம் தெரிவித்துள்ளது.
மெட்டல் மற்றும் இருப்பு உற்பத்தியாளர்கள்
இந்நிலையில் இந்தியாவில் மெட்டல் மற்றும் இருப்பு உற்பத்தி நிறுவனங்களான SAIL, டாடா ஸ்டீல், என்எம்டிசி மற்றும் எண்ணெய் உற்பத்தியாளர்கள், காகித உற்பத்தியாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
வர்த்தகப் பொருட்கள்
சீனா பொருளாதார வீழ்ச்சியில் உள்ளதால் உள்நாட்டுத் தேவைகள் குறைந்துள்ளது. இதனால் இந்தியாவில் வர்த்தகப் பொருட்களின் விலை கணிசமாகக் குறையும், இது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என அசோசாம் அமைப்பு தெரிவித்துள்ளது.
நீர்குமிழ்
சீனாவில் உதயமாகியுள்ள நீர்குமிழ் வெடித்தால் இந்திய சந்தை மட்டும் அல்லாது ஆசிய மற்றும் உலக நாடுகளும் பாதிக்கப்படும்.
4.16 டிரில்லியன் டாலர் வர்த்தகம்
உலகிலேயே அதிகளவில் வர்த்தகம் செய்யும் நாடுகளில் முதல் இடத்தில் உள்ள சீனா வருடத்திற்கு 4.16 டிரில்லியன் டாலர் வர்த்தகம் செய்கிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா 3.9 டிரில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைச் செய்து வருகிறது.
ஆபத்தான துறைகள்
சீனா நீர்குமிழ் வெடித்தால் இந்தியாவிற்குச் சீனா மூலம் கிடைக்கும் வருவாய் அதிகளவில் குறையும். இதனால் முக்கியத் துறைகளான சுற்றுலா, ஹோட்டல், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் அதிகளவில் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி பொருட்கள்
சீனா பொருளாதாரம் மேலும் மோசமடைந்தால் உலகச் சந்தையில் எல்க்ட்ரானிக், எலக்டிரிக்கல், மற்றும் டெலிகாம் உற்பத்தி பொருட்களின் விற்பனை மற்றும் வர்த்தகம் குறையும்.


Click it and Unblock the Notifications