மும்பை: சஜன் ஜிந்தால் தலைமை வகிக்கும் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் கிளை நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ இன்பாரஸ்டக்சர், துறைமுக விரிவாக்க பணிகளுக்காக அடுத்த 2 வருடத்தில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் வருடத்திற்கு 30 மில்லியன் டன் சரக்குகளை வர்த்தகம் செய்ய முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.3,000 கோடி முதலீடு
ஏற்கனவே விரிவாக்க பணிகளுக்காக 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது, இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு வருடத்தில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஜேஎஸ்டபிள்யூ இன்பாரஸ்டக்சர் நிறுவன துணை நிர்வாக இயக்குனர் சர்மா தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மற்றும் கோவா
இந்நிறுவனம் தற்போது மகாராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளில் தனது துறைமுக வர்த்தகத்தைச் செய்து வருகிறது. இந்நிறுவனம் வருடத்திற்கு 15 மில்லியன் டன் வரையிலான பொருட்களை வர்த்தகம் செய்து வருகிறது.
200 மில்லியன் டன்
2020ஆம் ஆண்டுக்குள் இந்நிறுவனம் 200 மில்லியன் டன் வரையிலான வர்த்தகத்தைச் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
பங்குச்சந்தை
இந்நிலையில் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் அடுத்தச் சில நாட்களில் குறிப்பிடத்தக்க அளவிலான லாபத்தைப் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications