ஜூன் மாத்தின் மொத்த விலை பணவீக்கம் -2.4% ஆக உயர்வு!
டெல்லி: இந்திய பொருளாதாரத்தின் முக்கியத் தடைகளாக இருக்கும் பணவீக்கம் மே மாதத்தை விடவும் ஜூன் மாத்தில் அதிகரித்தது.

கடந்த மே மாத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் -2.35 சதவீதமாக இருந்தது. ஜூன் மாத்திற்கான பணவீக்க அறிக்கையைச் செவ்வாய்க்கிழமை மத்திய அரசு வெளியிட்டது, இதில் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு 0.05 சதவீதம் அதிகரித்து -2.4 சதவீதமாகப் பதவாகியுள்ளது.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 5.66 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பவர் மற்றும் எரிபொருள் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 0.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
நுகர்வோர் பணவீக்கத்தின் அளவு நான்கு மாத உயர்வை எட்டி 5.4 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications