திருவனந்தபுரம்: அண்டை மாநிலமான கேரளாவில் 10வது ஊதிய கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய அறிவிப்பின் படி இம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 17,000 ரூபாயும், அதிகப்பட்சமாக ரூ.1.2 லட்சமாகவும் உள்ளது.
ஊதிய கமிஷன் தலைவர் சிஎன் ராமசந்திரன் நாயர், செயலாளர் கேவிடி தாமஸ் மற்றும் டிவி ஜார்ஜ் ஆகியோர் திங்கட்கிழமை இம்மாநில முதல் அமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் நிதியமைச்சர் கேஎம் மணி முன்னிலையில் சமர்ப்பித்தனர்.
10வது ஊதிய கமிஷன்
திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 10வது ஊதிய கமிஷன் அறிக்கையின் மூலம் இம்மாநில அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்த அறிவிக்கையில் ஊதிய உயர்வு மட்டும் அல்லாமல் மேலும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது.
ஜூலை 1
புதிய ஊதிய உயர்வு வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
ஓய்வு பெறும் வயது
ஊதிய கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 56 இல் இருந்து 58ஆக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஓய்வுதியம்
அரசு பணியாளர்களுக்கான ஓய்வுதிய தொகையை ரூ8,500 - ரூ60,000 வரையில் உயர்த்தவும் ஊதிய கமிஷன் பரிந்துறை செய்துள்ளது. முன்பு அதன் அளவு ரூ.4,500 - 29,920 ரூபாயாக இருந்தது.
தமிழ்நாட்டில்..
கேரள மாநிலத்தை ஒப்பிடுகையில், தொழில்துறையில் வேகமாக வளர்ந்து வரும் தமிழ்நாட்டில், அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை சற்று குறைவாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications