டெல்லி: மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், முதன் முதலாக உற்பத்தியைத் துவங்கியதும், ஏற்றுமதி செய்யததும் நாங்க தான் எனப் பெருமைப்படுகிறது பாக்ஸ்கான்.
சீனா மற்றும் அமெரிக்க நிறுவனங்கள்
தைவான் நிறுவனமான பாக்ஸ்கான் ஆந்திர பிரதேசத்தில் உள்ள புதிய தொழிற்சாலையில் சீனாவின் சியோமி மற்றும் அமெரிக்காவின் இன்போக்கஸ் நிறுவனங்களுக்கான மொபைல் தயாரிப்பைத் துவங்கி ஏற்றுமதி செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ சிட்டி
பாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை ஆந்திர மாநிலத்தில் 7000 ஏக்கர் ஸ்ரீ சிட்டி பகுதியில் அமைந்துள்ளது.
10,000 மொபைல் போன்
இத்தொழிற்சாலையில் தினமும் 10,000த்திற்கும் அதிகமான மொபைல் போன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
சிறிய அளவு
சீனாவில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலையை ஒப்பிடுகையில் இந்தியாவில் பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தியிலும் சரி, அளவிலும் சரி மிகவும் சிறியது.
77 கோடி ரூபாய்
இத்தொழிற்சாலை 77 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டது. இந்தியாவில் பாக்ஸ்கான் நிறுவனம் மேலும் 4 தொழிற்சாலைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications