டெல்லி: மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தவும், சக போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ளவும் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் 1 லட்சம் டிக்கெட்களை 1 ரூபாய் என்ற சலுகை விலையில் விற்பனை செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இச்சலுகையைப் பெற விமானப் பயணிகள் தங்களது பயணத்தை ஜூலை 15, 2015 முதல் மார்ச் 31,2016ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் முடிவு செய்ய வேண்டும்.
மொபைல் ஆப்-இல் மட்டும்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டும் வகையில் அதிகப் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட மொபைல் ஆப்-களை வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமடையச் செய்யவும், அதிகளவில் பதிவிறக்கம் செய்யத் திட்டமிட்டே 1 ரூபாய் சலுகையை அறிவித்துள்ளது.
3 நாள் விற்பனை
இச்சலுகையில் அறிவிக்கப்பட்ட 1,00,000 டிக்கெட்டுகள் அடுத்த 3 நாட்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. 1 ரூபாய் சலுகை என்பது, வரி மற்றும் கட்டணங்கள் இல்லாமல் அளிக்கப்படும் கட்டணம்.
இரு வழி சேவை
மேலும் 1 ரூபாய் சலுகை பெற பயணிகள் இரு வழிசேவையில் டிக்கெட்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் கட்டண சலுகை ஒரு வழியில் மட்டுமே கிடைக்கும்.
சஞ்சீவ் கபூர்
நிதி நெக்கடி பிரச்சனையில் இருந்து வெளிவரப் போராடும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு இத்தகைய சலுகை விற்பனை அளிக்க வேண்டுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த சஞ்சீவ் கபூர், "நிறுவனத்தில் நிதி நெருக்கடி பிரச்சனை எதுமில்லை, இச்சலுகை மொபைல் ஆப்பை பிரபலப்படுத்த மட்டுமே அளித்துள்ளது. இதனால் நிறுவனத்திற்க நஷ்டம் ஏதும் வராது" எனத் தெரிவித்தார்.
இவர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார்.
கட்டணங்கள் திரும்பப்பெற இயலாது
இச்சலுகையில் விற்பனை செய்யப்படும் டிக்கெடுகளின் கட்டணங்கள் திரும்பப்பெற இயலாது இதை மனதில் கொண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
சலுகை போர்
விடுமுறை காலங்கள் முடிந்துவிட்டதால், விமான நிறுவனங்கள் தொடர்ந்து கட்டண சலுகையை அறிவித்து வருகிறது. இதனால் அடுத்தச் சில மாதங்களுக்கு இந்திய விமான நிறுவனங்கள் தொடர்ந்து கட்டண சலுகையை அறிவிக்கும்.
இந்திய குடும்பங்கள்!
ஸ்பைஸ்ஜெட்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை பற்றி பிற செய்திகள் படிக்க இதை படிக்கவும்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications