பெங்களூரு: வன்பொருள் மற்றும் மென்பொருள் துறை வர்த்தகத்தில் 100 வருட சரித்திரத்தை கொண்ட ஐபிஎம், 21ஆம் நூற்றாண்டு இந்தியாவுடையது என கணித்துள்ளது.
ஐபிஎம் நிறுவனத்தின் தலைவர் வெர்ஜினியா ரோமிட்டி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஐபிஎம் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து சரிவைச் சந்தித்தாலும், இந்தியாவில் மிகப்பெரிய திட்டங்கள் மற்றும் முதலீடுகளுடன் தற்போது இறங்கியுள்ளது.
டிஜிட்டல் இந்தியா
பன்னாட்டு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளதால் சிஸ்கோ, ஐபிஎம், கூகிள் ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு வருகின்றனர்.
திங்க் போரம்
திங்க் போரம் என்னும் ஐடித் துறை சார்ந்த கூட்டத்தில் கலந்துகொண்ட வெர்ஜினியா ரோமிட்டி கூறுகையில், ஐபிஎம் தனது மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு மத்திய அரசின் புதிய திட்டங்களுக்குப் பங்காற்ற முடியும் எனத் தெரிவித்தார்.
இந்தியா
மத்திய அரசு வடிவமைக்கும் திட்டங்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியுடன் இருப்பதால், 21ஆம் நூற்றாண்டில் இந்தியா வேகமான வளர்ச்சியைக் காண உள்ளதாகவும் ரோமிட்டி தெரிவித்தார்.
வாட்சன்
இக்கூட்டத்தில் பேசிய ரோமிட்டி, ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான வாட்சன் சூப்பர் கம்பியூட்டரை பற்றிப் பேசினார். இந்தியாவின் இதன் குறித்த பயன்பாடுகளையும் விளக்கினார்.
ஏர்டெல்
இக்கூட்டத்திற்குப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தத்தின் தலைவர் சுனில் மிட்டல் அவர்களும் கலந்துகொண்டார்.
முக்கிய நிறுவனங்கள்
இத்திட்டத் துவக்க விழாவில் கலந்துகொள்ளவும், திட்டத்தில் பங்குபெறவும் மத்திய அரசு இந்தியாவின் முக்கிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications