மேக் இன் இந்தியா: போயிங் விமான நிறுவனத்துடன் டாடா ஒப்பந்தம்!

ஹைதராபாத்: இந்தியாவில் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இத்துறைக்குப் பல சலுகைகளை வழங்கியது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்நிலையில் இந்தியாவில் ராணுவ விமானங்கள் மற்றும் விமான உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட் (TSAL) நிறுவனம், அமெரிக்கப் போயிங் விமான நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்யுள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இந்நிறுவனங்கள் மத்தியிலான இந்த ஒப்பந்தத்தில், போயிங் நிறுவன சார்பில் ஷெல்லி லேவேன்டர் மற்றும் டாடா நிறுவன சார்பில் சுகாரன் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

உற்பத்தி

உற்பத்தி

இந்த ஒப்பந்தத்தின் படி இரு நிறுவனங்களின் கூட்டணியில் இந்தியாவில் விமானப் போக்குவரத்து மற்றும் ராணுவ விமானங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட உள்ளது.

18 நிறுவனங்கள்

18 நிறுவனங்கள்

போயிங் நிறுவனம் இந்தியாவில் இருந்து 18 நிறுவனங்களிடம் இருந்து உதிரிபாகங்களைக் கொள்முதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

டாடா நிறுவனம்

டாடா நிறுவனம்

இத்துறை உற்பத்தியில் டாடா குழுமம் ஏற்கனவே 1000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆதிபட்லா ஏரோஸ்பேஸ் மற்றும் பிரிசிஷன் என்ஜினியரிங் பார்க் அமைத்துள்ளது.

டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட்

டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட்

ஆதிபட்லா தொழிற்சாலையில் TSAL நிறுவனம், சிக்ரோஸ்கி மற்றும் லாக்ஹீட் மார்டின் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஏரோஸ்பேஸ், ஏவுகணை, ஹோம்லேண்டு செக்குரிட்டி, ஆப்ட்ரோனிக்ஸ், ரோடார் மற்றும் UAV ஆகியைவை உற்பத்தி செய்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+